தமிழ் சினிமாவில், ஒரு சாதாரண நடன இயக்குனராக அறிமுகமாகி, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என தன்னுடைய திறமையை மெருகேற்றி கொண்டவர் ராகவா லாரன்ஸ்.
தமிழ் சினிமாவில், ஒரு சாதாரண நடன இயக்குனராக அறிமுகமாகி, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், என தன்னுடைய திறமையை மெருகேற்றி கொண்டவர் ராகவா லாரன்ஸ்.
கோலிவுட் திரையுலகில், முனி, காஞ்சனா 2 , காஞ்சனா 3 போன்ற படங்களை இயக்கி, முன்னணி நடிகராக அறியப்பட்ட இவர், தற்போது பாலிவுட் திரையுலகத்திலும் இயக்குனராக காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, காஞ்சனா 2 படத்தை, 'லட்சுமி பாம்' என்கிற பெயரில், நடிகர் அக்ஷய்குமாரை வைத்து ரீமேக் செய்துள்ளார்.
அடுத்ததாக, சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வாசு இயக்க உள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக பெறப்பட்ட அட்வான்ஸ் தொகை, ரூபாய். 3 கோடியை, கொரோனா நிதிக்கு வழங்கி ஆச்சர்யப்படுத்தினார்.
இதை தொடர்ந்து, துப்புரவு பணியாளர்களுக்கு 25 லட்சம், சென்னை - காஞ்சிபுரம் விநியோகஸ்தர் சங்கத்திற்கு 15 லட்சம், மற்றும், நடிகர் சங்க நலிந்த கலைஞர்களுக்கு 25 லட்சம் என தொடர்ந்து தன்னுடைய சார்பில் பல்வேறு உதவிகளை அறிவித்து வருகிறார்.
அதே நேரத்தில், தற்போது மக்கள் பாதுகாப்பிற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு உதவும் நோக்கத்திலும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் பற்றியும், அவர் செய்து வரும் உதவிகள் பற்றி தெரிந்த அளவிற்கு, இவருடைய குடும்பம் பற்றி பெரிதாக அவர் பிரபலப்படுத்திக்கொண்டதே இல்லை,
அவ்வப்போது தன்னுடைய அம்மா மற்றும் தம்பியுடன் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே காண முடியும். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸின் மகள் புகைப்படம் வெளியாகி ரசிகர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. நன்கு வளர்ந்து, தன்னுடைய அன்பு தந்தை ராகவா லாரன்சுடன் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.