
நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த வாரம் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் வெளிவந்தது . இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் , சுமார் என்பது போல் தான் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த படத்தில் முதல் முறையாக மக்கள் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் தன்னுடைய பெயருக்கு முன்னாள் போட்டுள்ளார் ராகவா லாரன்ஸ் இது பல சர்ச்சைகளை சந்தித்த போது இயக்குனர் தான் அப்படி போட்டார் என கூறி எஸ்கேப் ஆனார் லாரன்ஸ்.
மக்கள் சூப்பர் ஸ்டார் என்று பெயர் போட்டுக்கொண்டதால் தன்னை தவறாக நினைத்து விடுவாரோ ரஜினிகாந்த் என்கிற ஒரு வித பயத்துடன் அவரை சந்தித்துள்ளார் ஆனால், ரஜினி லாரன்ஸை கண்டதும் கட்டுத்தழுவி பாரட்டியுள்ளார்.
இதை சற்றும் எதிர்ப்பார்க்காத லாரன்ஸ் எனக்கு இதுவே போதும், ரஜினி அண்ணன் ஆசீர்வாதம் கிடைத்துவிட்டது என செம்ம சந்தோஷத்தில் துள்ளி குதித்து சந்தோஷப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.