ராகவா லாரன்ஸ் மற்றும் ஆர்.பி.சௌத்ரி காவல்துறை ஆணையரிடம் புகார்....!!!

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
ராகவா லாரன்ஸ் மற்றும் ஆர்.பி.சௌத்ரி காவல்துறை ஆணையரிடம் புகார்....!!!

சுருக்கம்

சாய்ரமணி இயக்கதில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள 'மொட்டைசிவா கெட்டசிவா' படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார்.

இந்த  படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும்  முடிந்து விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் ஆர்.பி.செளத்ரி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர்கள், 'மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியீடு தொடர்பாக புகார் மனு அளித்தோம். லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா படம்' ஆரம்பத்தில் வேந்தர் மூவிஸ் மதன் தயாரிப்பதாக இருந்தது என்றும். 

ஆனால், சில காரணங்களால், சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் அந்த டைட்டில் மட்டும் வாங்கப்பட்டது என்றும் . இதனைத் தொடர்ந்து 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரீலீசுக்கு தயாராக இருக்கும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் சிலர் இடையூறு செய்து வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளோம்'' என்று கூறியுள்ளனர்.

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள 'மொட்டைசிவா கெட்டசிவா' படத்தை சாய்ரமணி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தனுஷ், சூர்யா, நயன்தாராவுக்கு தமிழக அரசு விருது.. அசுரன் முதல் கார்கி வரை.. விருதுகளை அள்ளிய படங்கள்! முழு லிஸ்ட்!
Mrunal Thakur : வசீகரிக்கும் தோரணையில் மிருணாள் தாகூர்.. மனதை திருடும் போட்டோஸ்