‘நடிகைகள் குறித்து கேவலமாகப் பேசுவதா?’...மு.க.ஸ்டாலினுக்கு ராதிகா சூடு...

Published : Mar 30, 2019, 05:44 PM IST
‘நடிகைகள் குறித்து கேவலமாகப் பேசுவதா?’...மு.க.ஸ்டாலினுக்கு ராதிகா சூடு...

சுருக்கம்

‘உங்கள் குடும்பத்தையும் உங்கள் தந்தை மு.கருணாநிதியையும் உயர்ந்திப் பிடித்ததே நடிகர், நடிகைகளாகிய நாங்கள் தான். எனவே எங்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவதை நீங்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்’ என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.

‘உங்கள் குடும்பத்தையும் உங்கள் தந்தை மு.கருணாநிதியையும் உயர்ந்திப் பிடித்ததே நடிகர், நடிகைகளாகிய நாங்கள் தான். எனவே எங்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவதை நீங்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்’ என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.

சமீபத்தில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுடன் டெல்லிக்கே சென்றனர். டெல்லியில் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். 'எங்களை அழைத்துப் பேசுங்கள்' என விவசாயிகள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அழைத்துப் பேசினாரா? பெரும்பணக்காரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்களை அழைத்துப் பேசினார். 'கேவலம்' நடிகைகளை அழைத்துப் பேசினார்’ என்று நடிகைகளுக்கு அழுத்தம் கொடுத்துப் பேசினார்.

ஸ்டாலின் பேசியோ அந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகைகளை இவ்வாறு பேசியதற்கு நடிகை ராதிகா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகை ராதிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மு.க.ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டார்.

அப்பதிவில் "ஸ்டாலின், நடிகைகள் குறித்த உங்களின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்கள் குடும்பத்துடன் பல ஆண்டுகளாக நல்லுறவை நாங்கள் கொண்டுள்ளோம். உங்கள் தந்தையை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளோம். உங்கள் குடும்பத்தையும், உங்களையும் தாழ்த்தி விடாதீர்கள்" என பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dhanush: பாலிவுட் மருமகனாகிறாரா தனுஷ்? இணையத்தை ஆக்கிரமித்த திருமணச் செய்தி!
Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்