அம்மா என்றால் அவ்வளவு உயிர். அதனால் தான் ராதிகாவின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக குழந்தைக்கு ராத்யா மிதுன் என்று பெயர் சூட்டியுள்ளார்.
ராதிகா - சரத்குமார் தம்பதியின் மகள் ரேயான் கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் வீரர், அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, ஏற்கனவே தாரக் என்கிற அழகிய ஆண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து, ரேயானுக்கு கடந்த 15 ஆம் தேதி, அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இதையும் படிங்க: மீண்டும் சட்டை பட்டனை கழட்டி போஸ்... கொரோனா ரணகளத்திலும் கிளு,கிளுப்பு காட்டும் ரம்யா பாண்டியன்...!
பிக்பாஸ் சுஜா வருணி வெளியிட்ட இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. ரேயானுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. இந்நிலையில் ரயன் தனது செல்ல மகளுக்கு பெயர் வைத்துள்ளார். குழந்தைக்கு ராத்யா மிதுன் என்று பெயர் வைத்துள்ளதாக ரயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
உடைமாற்ற இடமில்லாமல் தவித்த தமன்னா... ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கிடைத்த பகீர் அனுபவம்...!
தனது குழந்தையின் பெயர் என்னை பெற்றவர்களிடம் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ள ரேயான், என் மகளும் எனது அம்மா போல அருமையானவளாக வருவாள் என்று பெருமையாக குறிப்பிட்டுள்ளார். ரேயானுக்கு அம்மா ராதிகா தான் எல்லாம், அம்மா என்றால் அவ்வளவு உயிர். அதனால் தான் ராதிகாவின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக குழந்தைக்கு ராத்யா மிதுன் என்று பெயர் சூட்டியுள்ளார்.
Introducing our baby girl - Radhya Mithun 💕
All I want for you is to be feisty, strong, compassionate and absolutely bad ass!
Her name comes from my birth giver, I know she’s gonna be as amazing as her! ❤️ pic.twitter.com/72SimG8xmv
இதையும் படிங்க:
ஊரடங்கில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் ராதிகா, சரத்குமார் ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ரேயானின் ட்வீட்டை பதிவை பார்த்த ஏராளமான ராதிகா ரசிகர்கள் குட்டி பாப்பாவையும், ரயனையும் வாழ்த்தி வருகின்றனர். மேலும் குழந்தையின் பெயரை வெளியிட்டது போலவே க்யூட் புகைப்படம் ஒன்றையும் தட்டிவிடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.