செல்ல பேத்தியுடன் க்யூட்டாக போஸ் கொடுத்த ராதிகா, சரத்குமார்... , “குட்டி பாப்பா” போஸ் தான் டாப்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 15, 2020, 09:01 PM ISTUpdated : Jun 15, 2020, 09:13 PM IST
செல்ல பேத்தியுடன் க்யூட்டாக போஸ் கொடுத்த ராதிகா, சரத்குமார்... , “குட்டி பாப்பா” போஸ் தான் டாப்...!

சுருக்கம்

இந்த லாக்டவுன் நேரத்தில் தான் பலருக்கும் உறவுகளின் அருமையும், அரவணைப்பும் புரிய ஆரம்பித்துள்ளது. 

ராதிகா - சரத்குமார் தம்பதியின் மகள் ரேயான் கடந்த 2016  ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் வீரர், அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, ஏற்கனவே தாரக் என்கிற அழகிய ஆண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து, ரேயானுக்கு கடந்த 15 ஆம் தேதி, அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

இதையும் படிங்க:  சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

இந்நிலையில் ரயன் தனது செல்ல மகளுக்கு  ராத்யா மிதுன் என்று பெயர் வைத்துள்ளதாக ரயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.தனது குழந்தையின் பெயர் என்னை பெற்றவர்களிடம் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ள ரேயான், என் மகளும் எனது அம்மா போல அருமையானவளாக வருவாள் என்று பெருமையாக குறிப்பிட்டுள்ளார். அம்மா மீது அதீத பாசம் கொண்ட ரயன், ராதிகாவின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக தனது குழந்தைக்கு பெயர் வைத்தார். 


தற்போது லாக்டவுனால் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில், வீட்டிற்குள் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலரோ தங்களது சின்ன வயது புகைப்படங்களுடன் சேர்த்து மலரும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.  இந்த லாக்டவுன் நேரத்தில் தான் பலருக்கும் உறவுகளின் அருமையும், அரவணைப்பும் புரிய ஆரம்பித்துள்ளது. 

இதையும் படிங்க:  ஹாட் பிகினியில் அமலா பால் ... அப்படியொரு போஸில் ரசிகர்களிடம் கேட்ட அதிரடி கேள்வி...!

இந்நிலையில் நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரேயானின் மகளான தனது குட்டி பேத்தியை கொஞ்சி மகிழும் புகைப்படம் ஒன்றை ராதிகா ஷேர் செய்துள்ளார். ராதிகா பேத்தியை கொஞ்ச, சரத்குமார் அருகில் அமர்ந்து அதை பார்த்து ரசிக்க என புகைப்படம் முழுவதுமே அவ்வளவு மகிழ்ச்சி நிரம்பி வழிகிறது. ஒட்டுமொத்த குடும்பத்தின் சந்தோஷத்தையும் ஒரே நிமிடத்தில் காட்டும் அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிலும் நம்ம குட்டி பாப்பா கொடுத்துள்ள போஸ் தான் செம்ம க்யூட். நீங்களே அதை பாருங்கள்... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?