நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை: வெளியானது பிரேத பரிசோதனை முடிவுகள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 15, 2020, 07:47 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை:  வெளியானது பிரேத பரிசோதனை முடிவுகள்...!

சுருக்கம்

இந்நிலையில் நேற்று சுஷாந்தின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் டாக்டர் ஆர்.என். கூப்பர் நகராட்சி பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 6 மாதமாகவே மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் தனது தந்தை, சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கூட பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. 34 வயதே ஆன சுஷாந்தின் அதிர்ச்சி மரணம் பாலிவுட்டில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: ஹாட் பிகினியில் அமலா பால் ... அப்படியொரு போஸில் ரசிகர்களிடம் கேட்ட அதிரடி கேள்வி...!

லாக்டவுன் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சுஷாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அவர் மன அழுத்தத்தில் இருப்பது பல பாலிவுட் பிரபலங்களுக்கு தெரிந்தும் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனிடையே சுஷாந்தின் தாய் மாமா அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: பெண் மேனேஜர், சுஷாந்த் தற்கொலைகளுக்கிடையே தொடர்பா?... தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார்...!

இந்நிலையில் நேற்று சுஷாந்தின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் டாக்டர் ஆர்.என். கூப்பர் நகராட்சி பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சுஷாந்தின் சுவாச உறுப்புகளில் நடத்தப்பட்ட பகுப்பாய்வு சோதனையில், அவர் தூக்கிட்டு கொண்டதால் ஏற்பட்ட மூச்சுதிணறலால் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட அன்று வீட்டில் இருந்த பணியாளர்கள் மற்றும் நண்பர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?