
இந்தியா முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்கள் திரையரங்குகளை மூட உத்தரவிட்டுள்ளன. தமிழகம், மகாராஷ்ட்ரா உள்பட இன்னும் சில மாநிலங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த கட்டுப்பாடுகள் வருகிற வாரத்தில் மேலும் கடுமையாக்கப்படும் என்பதால், பொங்கலுக்கு வெளியாக இருந்த படங்கள் ஒவ்வொன்றாக பின்வாங்கத் தொடங்கி உள்ளன. ஜனவரி 7-ந் தேதி வெளியாக இருந்த ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், முதலில் தள்ளிப்போனது. தற்போது பிரபாஸின் பிரம்மாண்ட படமான ராதே ஷ்யாம், பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கி உள்ளது.
இவை இரண்டுமே பான் இந்தியா படங்கள் என்பதால், இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டிருந்தனர். குறிப்பாக ஆர்.ஆர்.ஆர் படம் கடந்த ஒரு மாத காலமாக புரமோஷன் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்த படத்தின் புரமோஷனுக்காக மட்டும் 20 கோடி ரூபாய் செலவு செய்திருந்தார்களாம். தற்போது ரிலீஸ் தள்ளிப்போனதால் அவை அனைத்து வீணாய் போனது.
இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கு போட்டியாக அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ரிலீசும் தற்போதுவரை குழப்பத்தில் தான் இருக்கிறதாம். முதன்முறையாக இப்படத்தை பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் தற்போதைய சூழலில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறி ஆகி உள்ளது.
ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம் போன்ற படங்கள் பின்வாங்கியது வலிமை படத்துக்கு சாதகமாக இருந்தாலும், ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தியேட்டரும் பயமின்றி வருவார்களா என்பது சந்தேகம் தான். இதனால் படத்தின் வசூல் அடிவாங்கும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரிலீசை தள்ளிப்போடுவார்களா? அல்லது தைரியமாக களமிறங்குவார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.