என்னப்பா இப்படி பண்ணிட்டிங்க..அஸ்வினின் அதிகப்பிரசங்கி தனம்..முதல் படம் திரையரங்கில் வெளியாக வழியே இல்லையாம்..

Kanmani P   | Asianet News
Published : Jan 04, 2022, 07:50 PM IST
என்னப்பா இப்படி பண்ணிட்டிங்க..அஸ்வினின் அதிகப்பிரசங்கி தனம்..முதல் படம் திரையரங்கில் வெளியாக வழியே இல்லையாம்..

சுருக்கம்

கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளதால்  தமிழகத்தில் ஊரடங்கு போடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அஸ்வினின் முதல் படமான என்ன சொல்ல போகிறாய் படத்தை ஓடிடி யில் வெளியிட இயக்குனர், தயாரிப்பாளர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியான குக் விதி கோமாளி என்ற  சமையல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின் என்கின்ற அஸ்வின் குமார். இதற்கு முன்பாக சில குறும் படங்களிலும் அவர் நடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் நுழைய வேண்டும்  என்ற கனவில் இருந்து வந்த அவர்  பிரபலத்திற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். அதில் தனக்கு இருந்த சமையல் திறமையின் மூலமாகவும், பவ்யமான பையன் போன்ற தனது தோற்றத்தாலும் ரசிகர்கள் பலரால் விரும்பப்பட்டு வந்தார் அவர்.

பின்னர் ஒருசில நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்ட பாடல்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு கூடியது. இதையடுத்து புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வந்தார் அஸ்வின். அவர் நடித்துள்ள என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அவர் பேசிய எல்லையை மீறி பேச்சுக்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஒரே நிகழ்ச்சியில் நான்கு விஜய், ஆறு ரஜினிகாந்த் போல அவர் சுய பெருமை  பேசியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவரின் பேச்சு அவரின் வாழ்வில் இவ்வளவு பெரிய எதிர்மறை ஏற்படுத்துமா என்று அவரே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு அவரை பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். ஒரு படம் கூட முழுசா நடிக்காத அஸ்வினுக்கு இப்போதே இந்த அளவிற்கு ஆணவமா என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். மேடையில் அவர் தனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள ஒருவரை போல காட்டிக் கொண்டதுடன், தான் மிகவும் அழகானவன் என்றும் அதற்காக எனது பெற்றோர்களுக்கு நன்றி சொல்லுங்கள் என அவர் பேசிய பேச்சை பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

மேலும், எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன் அதுபோல 40 கதைகள் கேட்டு எல்லாவற்றிலும் நான் தூங்கிவிட்டேன் எனக்கூறி  மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி கொண்டார். இதனால் என்ன சொல்லப்போகிறாய் பட வெளியீட்டை பிப்ரவரிக்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் ஒத்தி வைப்பதாக அறிவித்தார். 

ஆனால் தற்போது அதற்கும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளதால்  தமிழகத்தில் ஊரடங்கு போடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அஸ்வினின் முதல் படமான என்ன சொல்ல போகிறாய் படத்தை ஓடிடி யில் வெளியிட இயக்குனர், தயாரிப்பாளர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்த அஸ்வின் விரைவில் தனது படம் திரையரங்கில் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில் தயாரிப்பாளரின் இந்த முடிவு அஸ்வினுக்கு மனா வருத்தத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!