தீபா கணவர், அரசியலுக்கு வரும்போது ... ரஜினி வரக்கூடாதா...? அசால்ட் பேச்சால் அசத்திய ராதாரவி...

 
Published : May 20, 2017, 09:03 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
தீபா கணவர், அரசியலுக்கு வரும்போது ... ரஜினி வரக்கூடாதா...? அசால்ட் பேச்சால் அசத்திய ராதாரவி...

சுருக்கம்

radharavi talking about rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போதைய அரசியல் நிலை குறித்து, நேற்று  ரசிகர்களின் சந்திப்பு போது பேசினார்.

மேலும் இவரது பேச்சால், இவர் அரசியலுக்கு வரலாம் என ஒரு சில அரசியல் தலைவர்கள் கூறினாலும் , ஒரு சிலர் இவர் அரசியலுக்கு வருவதில் எந்த பயனும் இல்லை என்பது போல தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் அவருடன் பல திரைப்படங்களில் நடித்து இருப்பவருமான ராதாரவி, ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கருத்து கூறியுள்ளார் ,அவர் கூறுகையில்,  'ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் கடவுள் ஆணைபடி தான் முடிவு எடுப்பார். 

எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும் வரவேற்கத்தக்க முடிவு தான். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். தமிழக மக்களிடம் அவர் அதிகமான புகழ், பணம் சம்பாதித்து உள்ளார். எனவே இந்த மக்களுக்கு செலவு பண்ண தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன்.

இதனை அவர் அரசியலுக்கு வரும்போதுதான் பார்க்க வேண்டும். அவர் யார், யாரை நல்லவர் என நினைக்கிறாரோ அவர்களை வைத்து கொள்ளலாம். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை' என்று கூறினார். ராதாரவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துப்பாக்கி கொடுத்தவருடன் மோதும் எஸ்கே – ஜன நாயகன் படத்துக்கு பராசக்தி போட்டி; ஜன.,10ல் ரிலீஸ்!
கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!