"நான் எப்ப சிக்குவேன்னு பார்த்துக்கிட்டே இருக்கு"... விழா மேடையில் பிரபல பாடகியை கலாய்த்த ராதாரவி....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 05, 2020, 07:00 PM IST
"நான் எப்ப சிக்குவேன்னு பார்த்துக்கிட்டே இருக்கு"... விழா மேடையில் பிரபல பாடகியை கலாய்த்த ராதாரவி....!

சுருக்கம்

நான் எப்ப எதை பேசினாலும், வேறொரு பொண்ணு ரெடியாக இருக்கிறார். இவன் எப்ப எதையாவது தப்பா சொல்லுவான், உடனே அதை டுவிட்டரில் போட்டு தட்டலாம் என காத்துக்கொண்டிருக்கிறார்.  

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடிகர் சசிகுமாரின் ராஜ வம்சம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நிக்கி கல்ராணி, விஜயகுமார், யோகிபாபு, ரேகா, மனோபாலா, தம்பி ராமையா ஆகியோர்  மற்றும் சிறப்பு விருந்தினராக, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ராதா ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் பேசிய ராதாரவி, "இந்த பொண்ணு எல்லா விஷயத்துக்கும் பொருந்தும் பொண்ணு" என்று நடிகை நிக்கி கல்ராணியை குறிப்பிட்டு பேசினார். நான் ஏதோ நல்ல எண்ணத்தில நடிகையை பற்றி சொல்லப்போக,அது தப்பா போயிடுது. இப்படித்தான் தெரியாத்தனமாக பிரபல நடிகையை  பற்றி எதேச்சையாக பேசினேன். வேலை வெட்டி இல்லாதவங்க ட்விட்டரில் போட்டு சர்ச்சையை கிளப்பிவிட்டார்கள். அது பூகம்பம் மாதிரி கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது” என்று நயன்தாராவின் விவகாரம் குறித்து சூசகமாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், நான் எப்ப எதை பேசினாலும், வேறொரு பொண்ணு ரெடியாக இருக்கிறார். இவன் எப்ப எதையாவது தப்பா சொல்லுவான், உடனே அதை டுவிட்டரில் போட்டு தட்டலாம் என காத்துக்கொண்டிருக்கிறார்.  தேவையில்லாத வேலைகளை வேலைவெட்டி இல்லாதவர்கள் செய்து கொண்டு வருவார்கள்” பிரபல பாடகி சின்மயியையும் சாடைமாடையாக விமர்சித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?