
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்த என்ற படத்தில் நடித்து அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் தேவரகொண்டாவின் அடுத்தப்படத்திலும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
இதையும் படிங்க: உரிமைகளை கேட்க புறப்பட்ட "கர்ணன்"... கெத்து காட்டும் ஷூட்டிங் ஸ்பார்ட் ஸ்டில்ஸ்...!
தெலுங்கு மற்றும் கன்னடத்தில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்து நிற்கும் ராஷ்மிகா கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தமிழ் ரசிகர்கள் செல்லமாக குட்டி நயன்தாரா என அழைக்கும் அளவிற்கு அவர்களது மனதில் இடம் பிடித்துவிட்டார். தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தளபதி விஜய்யின் 65வது படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் ஹீரோயின் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ரஜினி கிட்ட காசு வாங்கிட்டியா?... சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!
ராஷ்மிகா மந்தனாவின் போட்டோ ஷூட் உடன் வடிவேலு ஸ்டைலை மீக்ஸ் செய்து நெட்டிசன்கள் கிரியேட் செய்த மீம்ஸ்கள் தாறுமாறு வைரலாகின. இதனால் தமிழ் ரசிகர்களுக்கு மேலும் பரிட்சையமானவராக மாறினார் ராஷ்மிகா.
இதையும் படிங்க: கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து இரண்டரை மணி நேரம் பாலியல் தொல்லை...16 வயதில் நடிகைக்கு நடந்த கொடூரம்!
சமீபத்தில் ராஷ்மிகா நடிப்பில் வெளியான பீஷ்மா திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஹீரோ நிதினுடன் சேர்ந்து ராஷ்மிகா ஒயின் குடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த காட்சிக்காகவே அந்த பாடல் வீடியோ யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.