5 முன்னணி இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி படம்... அமேசான் ப்ரைமில் ரிலீஸ்... எப்போது தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Sep 30, 2020, 8:57 PM IST
Highlights

சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற தலைப்பில் ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்கியுள்ளனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக அடுத்தடுத்து படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ , கீர்த்தி சுரேஷின் ‘பெண் குயின்’ படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’,அனுஷ்காவின் ‘நிசப்தம்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ஓடிடி-யில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் 5 முன்னணி இயக்குநர்கள் ஒன்றிணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி  திரைப்படமும் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது உறுதியாகியுள்ளது. 

சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற தலைப்பில் ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்கியுள்ளனர். ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள 'புத்தம் புது காலை' திரைப்படம் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் ‘இளமை இதோ இதோ’ கதையில் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். கெளதம் மேனன் இயக்கியுள்ள ‘அவரும் நானும் - அவளும் நானும்’ எம்.எஸ்.பாஸ்கர், ரீத்து வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி இயக்கியுள்ள‘காஃபி, எனி ஒன்?’ குறும்படத்தில் அவருடன் அனு ஹாசன், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். ‘ரீயூனியன்’ குறும்படத்தை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். ஆண்டிரியா லீலா சாம்சன், சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடித்துள்ளனர். சுப்புராஜ் இயக்கியுள்ள‘மிராக்கிள்’ குறும்படத்தில்  இதில், பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
 

click me!