Pushpa housefull in North :Pan India Star-ஆகும் அல்லு அர்ஜுன்..சத்தமில்லாமல் ப்ரொமோட் ஆன PushpaTheRule ...

Kanmani P   | Asianet News
Published : Dec 20, 2021, 12:22 PM IST
Pushpa housefull in North :Pan India Star-ஆகும் அல்லு அர்ஜுன்..சத்தமில்லாமல் ப்ரொமோட் ஆன PushpaTheRule ...

சுருக்கம்

Pushpa movie housefull in North : வட இந்தியா முழுவதும் புஷ்பா திரையிடப்படுள்ள அரங்கங்கள் பலவும் ஹவுஸ்ஃபுல்லாகி வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்துள்ள படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்...  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.  

இப்படத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். 

இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. 

ரிலீசுக்கு பின் இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. முதல் நாளில் இப்படம் உலகளவில் 71 கோடி ரூபாய் வசூலித்திருந்த நிலையில், தற்போது இரண்டு நாளில் இப்படம் 116 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிவேகமாக 100 கோடியை கடந்த படம் என்ற சாதனையை புஷ்பா படைத்துள்ளது.

இந்நிலையில் தென் இந்தியாவிழும் திரையிடப்படுள்ள புஷ்பா அங்கு மகத்தான வரவேற்பை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு இந்த வெற்றியின் காரணமாக அல்லு அர்ஜுன் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!