அவங்கள வளர்த்து விடுறதே விஷால்தான்! தாறுமாறாக மல்லுக்கு நிற்கும் தயாரிப்பாளர்கள்...

Published : Nov 14, 2018, 12:42 PM IST
அவங்கள வளர்த்து விடுறதே விஷால்தான்!  தாறுமாறாக மல்லுக்கு நிற்கும் தயாரிப்பாளர்கள்...

சுருக்கம்

அடுத்த வீட்டு அண்ணன் போல் கறுப்பாய், நெடுநெடுவென சுமார் மூஞ்சியுடன் சாதாரணமாய் இருக்கலாம் விஷால். ஆனால் தன்னை மீடியா வெளிச்சத்தினுள்ளும், தன் துறை சார்ந்த அதிகார அரியணையிலும் அமர்த்திக் கொள்வதில் அண்ணனிடம் அரசியல்வாதிகளே பிச்சை எடுக்க வேண்டும். 

நடிகர் சங்க  தேர்தல் நாளில் அவரது பர்ஃபார்மென்ஸுகளே சொல்லியிருக்கும் அவர் யாரென்று! அது மட்டுமா, தமிழகத்தை சேர்ந்த அம்மாம் பெரிய தயாரிப்பாளர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு, ஜஸ்ட் லைக் தட் ஆக தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக அவர் உருவெடுத்ததெல்லாம் அசாதாரணமானவை. 

விஷால் சீனுக்கு வந்த பிறகுதான், திருட்டு வி.சி.டி. பற்றிய அலசல்கள், பரபரப்புகள் பெரிதாய் வெளிப்பட்டன. ‘ஆம்பள’ பட ஷூட்டுக்காக பொள்ளாச்சி சென்றிருந்தபோது, திருட்டு வி.சி.டி. விற்பனையை தடுக்க அவர் ரோட்டில் இறங்கியதும், விற்ற நபரை அவர் விரட்டி பிடித்ததும் சுந்தர்.சி யே நினைத்திராத சீன்கள். 

என்னதான் சவுண்டு விட்டாலும் விஷாலால் தமிழ்ராக்கர்ஸ்ட் டீமை எதுவும் செய்யமுடியவில்லை. சர்கார் வரை அவர்கள் சாதித்துவிட்டார்கள், 2.0 வுக்கும் சவால் விட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராக பொங்கியிருப்பதோடு, அவரை துவைத்து தொங்கவிட்டுள்ளனர். தயாரிப்பாலர் கசாலி என்பவர் “தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவியேற்ற விஷால் முதலில் ஸ்டண்ட் அடித்தார். போலியான வாக்குறதிகளை அள்ளி வீசினார். 

ஆனால் இப்போதெல்லாம் அவர் தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராக வாய் திறப்பதே இல்லை. அவருடைய பலவீனமான நடவடிக்கைதான் தமிழ் ராக்கர்ஸின் வளர்ச்சிக்கு காரணமே!” என்றிருக்கிறார், மற்றொரு தயாரிப்பாளர் சக்தி வாசனோ “தயாரிப்பாளர் சங்கத்திலேயே சில கறுப்பு ஆடுகள் இருக்கின்றன. அவர்கள் தமிழ் ராக்கர்ஸுக்கு மறைமுகமாக உதவுகின்றனர். 

இதையெல்லாம் தடுக்க நிர்வாகிகள் உழைப்பதேயில்லை. இந்த விஷயத்தில் இனி விஷாலை நம்பி எந்த பிரயோசனமுமில்லை. ” என்றிருக்கிறார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை விஷால் மறுத்தாலும் கூட, இந்த திடீர் புகைச்சலும், வெளிப்படையான பாய்ச்சலும் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?