
தளபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் மெர்சல்க்கு தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டே தான் இருக்கு இருந்தும் இந்த படம் தொடர்ந்து சாதனைகள் புரிந்து கொண்டே இருக்கிறது. இந்த படம் தீபாவளி ரிலீஸ் உறுதி என்று நாம் தொடர்ந்து சொல்லிவந்தோம். விஜய்க்கு பிடிக்காத ஒரு சிலர் இந்த படம் வெளியாகாது என்று சொல்லி வந்தனர்.
இந்நிலையில் மெர்சல் படம் தீபாவளிக்கு மெர்சலாக வெளியாகும் என்பதை தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக அதன் உரிமையாளர் முரளி நேற்று அதை திட்ட வட்டமாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
"மெர்சல்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்தப் பணிகள் விரைவில் முடிந்துவிடும். அதனால் விஜய்சார் ரசிகர்கள் கவலைப்படவேண்டாம். ’மெர்சல்' திரைப்படம், தீபாவளி விருந்தாக 'நிச்சயம் ரிலீஸாகும்" என தெரிவித்துள்ளார்.
அதோடு இன்று டைட்டில் பிரச்சனையும் தளபதிக்கு சாதகமாக அமையும் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அனைத்து பிரச்சனையும் முடிந்து தீபாவளிக்கு தெறிக்கவிட வரப்போகுது மெர்சல்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.