டி.ஆர், சிம்பு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறப் புறப்பட்ட தயாரிப்பாளர்...

By vinoth kumarFirst Published Dec 25, 2018, 9:22 AM IST
Highlights

‘வல்லவன்’ படத்துக்கு உரிமை கொண்டாட டி.ராஜேந்தருக்கோ அவரது மகன் சிம்புவுக்கோ எந்த தகுதியும் இல்லை. அவர்கள் இருவர் மீதும் இன்றே கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய இருக்கிறேன்’ என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.

‘வல்லவன்’ படத்துக்கு உரிமை கொண்டாட டி.ராஜேந்தருக்கோ அவரது மகன் சிம்புவுக்கோ எந்த தகுதியும் இல்லை. அவர்கள் இருவர் மீதும் இன்றே கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய இருக்கிறேன்’ என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.

சினிமாவில் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து பின்னர் புரடக்‌ஷன் மேனேஜராகி தயாரிப்பாளரானவர் பி.எல்.தேனப்பன். 1998ல் கமலின் ‘காதலா காதலா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இதுவரை 13 படங்கள் வரை தயாரித்திருக்கிறார். இவரது தயாரிப்பில் ராம் இயக்கியிருக்கும் ‘பேரன்பு’ பிப்ரவரி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் தன் தயாரிப்பில் வெளிவந்த ‘வல்லவன்’ படத்தின் இந்தி உரிமை தன்னிடம் இருப்பதாக அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து கொதித்துப்போன அவர், ‘டி.ஆரும் சிம்புவும் என்னுடைய 35 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கேலிக்கூத்தாக்குகிறார்கள்.

‘வல்லவன்’ படத்தில் சிம்புவை இயக்குநராக அறிமுகப்படுத்தி அடைந்த நஷ்டங்களிலிருந்து இன்றுவரை மீளமுடியாமல் தவிக்கிறேன். இப்படி சிம்புவால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்களின் கதையை இந்தத்திரையுலகம் நன்றாக அறியும்.

நிலைமை இப்படியிருக்க என்னைப்பற்றி அபாண்டமாகப் பேட்டி அளித்துவருகிறார் டி.ஆர். இதற்கு அவர் மீது மான நஷ்ட வழக்குப் போடுவதோடு, கமிஷனர் அலுவலகத்திலும் இன்றே புகார் கொடுக்கவிருக்கிறேன்’ என்றவர் பட உரிமை தன்னிடம் இருப்பதற்கான ஜெமினி லேப் லெட்டரையும் வெளியிட்டார்.

click me!