சிட்டி முதல் பட்டி தொட்டி வரை ஆல் ஏரியாவிலும் தாறுமாரு பண்ணும் விஸ்வாசம்!! அந்தரா ஒரு ஃபேமிலி படம்...

Published : Dec 24, 2018, 09:37 PM IST
சிட்டி முதல் பட்டி தொட்டி வரை ஆல் ஏரியாவிலும் தாறுமாரு பண்ணும் விஸ்வாசம்!! அந்தரா ஒரு ஃபேமிலி படம்...

சுருக்கம்

அஜித், நயன்தாரா இணைந்து நடித்துள்ள விஸ்வாசம் படம்  பொங்கலுக்கு வெளியாகவுள்ள இருக்கிறது, மோஷன் போஸ்டர், சிங்கிள் டிராக் என அடுத்து டீசர் ட்ரெய்லர் வெளியாகவுள்ள நிலையில் சென்சார் போர்டில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.  

சிவா - அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள   விஸ்வாசம் படத்தைப் பார்த்த தணிக்கை துறை அதிகாரிகள் எந்த இடத்திலும் வெட்டாமல் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதத்தில் உருவாகியுள்ளதாகத் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

“சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களை தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் "விஸ்வாசம்" படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் "யு" சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித் குமார் சாருக்கும், சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள். எல்லாத் தரப்பினரையும் கவரும் படமாக விஸ்வாசம் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

படத்தின் இசை குறித்து கூறியுள்ள அவர், “இசையமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாட்டத்துக்கு உகந்தவாறு பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது. மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்தப் படத்தின் பாடல்கள் செம ஹிட்" என்று தெரிவித்துள்ளார்.

விவேக், தம்பி ராமையா, யோகி பாபு ,ரமேஷ் திலக், அனைக்கா, கோவை சரளா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். டி இமானின் இசையில் , ரூபன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டார். இப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்துடன் சேர்ந்து களமிறங்கும் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்திற்குத் தணிக்கை துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?