
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் என்பதை தாண்டி, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு லொகேஷன் மேனேஜராக பணியாற்றி உள்ளவர் கள்ளிப்பட்டி ஜோதி. கோபியை சுற்றி எடுக்கப்பட்ட பல படங்களுக்கு இவர் தான் லொகேஷன் மேனேஜராக பணியாற்றியுள்ளார். எனவே இவரை தெரியாதவர் அதிகம் இருக்க வாய்ப்பு இல்லை.
எனவே திரையுலகை சேர்ந்த பலரும் இவரை குட்டி கோடம்பாக்கம் என்று தான் அழைப்பார்கள். மேலும் இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கிய சோலையம்மா, தாய் மனசு, போன்ற படங்களை தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான கற்பக ஜோதி பிலிம்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளிப்பட்டி ஜோதி கோபி செட்டிபாளையத்தில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.