’அரை வேக்காட்டுத்தனமான செய்திச் சேனல்கள்’...கலாய்க்கும் தயாரிப்பாளரின் மனைவி

By Muthurama LingamFirst Published Nov 20, 2019, 3:55 PM IST
Highlights

நடிகர் சூர்யாவின் உதவியாளர் மற்றும் மேலாளராக இருந்து தயாரிப்பாளராக உயர்வு பெற்றவர் ஞானவேல் ராஜா. சூர்யா, ஜோதிகா நடித்த ‘சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த அவர், சூர்யா,கார்த்தி,விஜய் சேதுபதி, ஆர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களை வைத்து 25க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் கமல் தன்னிடம் 10 கோடி கடனாகப் பெற்றுத் திரும்பத் தரவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோரின் உறவினரும் ’பருத்தி வீரன்’,’சிங்கம்’உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவுக்கு சென்னை எழும்பூர் நீதி மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பங்கமாகக் கலாய்த்திருக்கிறார் அவரது மனைவி நேஹா.

நடிகர் சூர்யாவின் உதவியாளர் மற்றும் மேலாளராக இருந்து தயாரிப்பாளராக உயர்வு பெற்றவர் ஞானவேல் ராஜா. சூர்யா, ஜோதிகா நடித்த ‘சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த அவர், சூர்யா,கார்த்தி,விஜய் சேதுபதி, ஆர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களை வைத்து 25க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் கமல் தன்னிடம் 10 கோடி கடனாகப் பெற்றுத் திரும்பத் தரவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக வருமான வரித்துறை, வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் ஞானவேல் ராஜா தனது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கு விசாரணையின்போது, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நடைமுறைக்காக நோட்டீஸ் அனுப்பியும் ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை சார்பில் வாதிட்டப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு உத்தரவிட்ட நீதிமன்றம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஞானவேல்ராஜா மனைவி நேஹா, ட்விட்டரில் இதுகுறித்து நக்கலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வரி ஏய்ப்பு புகாரா? வரியை ஏய்க்கவும் இல்ல, மேய்க்கவும் இல்ல. அரைவேக்காட்டுத்தனமான செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் அவற்றைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்கள். இதுல பிடிவாரண்ட் வேற. ஸ்ப்ப்ப்பா... முடியல” என நக்கலாகத் தெரிவித்துள்ளார் நேஹா.

Vari yeipu pugaaraa??!! Variya yeikkavun illa, meikavu illa!!! U half baked news channels and the dumb followers!! Idhula pidi warrant vera🤦🏻‍♀️Shaba mudiyala🙆🏻‍♀️

— neha nehu:) (@NehaGnanavel)

click me!