’அலுவலகத்துக்கு தினமும் நடந்தே செல்கிறார் பரோட்டா சூரி...ஏன் தெரியுமா?...

Published : Nov 20, 2019, 03:07 PM IST
’அலுவலகத்துக்கு தினமும் நடந்தே செல்கிறார் பரோட்டா சூரி...ஏன் தெரியுமா?...

சுருக்கம்

இது அந்த ஏரியாவாசிகளின் பல்லாண்டு காலப்பழக்கம்.மக்களின் அந்த நீண்டகால வழக்கத்துக்கு வேட்டு வைத்திருக்கிறார் நடிகர் பரோட்டா சூரி. யெஸ் இப்போது மீனாவின் வீட்டை விலைக்கு வாங்கிவிட்டாராம் சூரி. சுமார் 6.5 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இனி வீட்டிலிருந்து மிக மிக அருகில் உள்ளதால் அலுவலகத்துக்கு சூரி நடந்துதான் செல்லமுடியும்.

மதுரையில் ஓட்டல்கள் திறந்து கோடம்பாக்கத்தில் பலரின் ஏக்கத்துக்கும் ஆளான காமெடி நடிகர் பரோட்டா சூரி, சென்னை சாலிகிராமத்தில் ஒரு ஏரியாவின் முக்கிய லேண்ட் மார்க்காக விளங்கிய நடிகை மீனாவின் பங்களா ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார்.

நகைச்சுவை நடிகர் சூரியின் அலுவலகம் சாலிகிராமத்தில் நடிகை மீனாவின் விட்டுக்கு அருகில் உள்ளது.சூரியின் அலுவலக முகவரி சொல்ல வேண்டுமென்றாலோ அல்லது அப்பகுதியில் எந்த விலாசத்தைச் சொல்லவேண்டுமென்றாலும் நடிகை மீனாவின் வீட்டிலிருந்து இடதுபுறமாக, வலது புறமாக என்றே அட்ரஸ் சொல்லுவார்கள். இது அந்த ஏரியாவாசிகளின் பல்லாண்டு காலப்பழக்கம்.மக்களின் அந்த நீண்டகால வழக்கத்துக்கு வேட்டு வைத்திருக்கிறார் நடிகர் பரோட்டா சூரி. யெஸ் இப்போது மீனாவின் வீட்டை விலைக்கு வாங்கிவிட்டாராம் சூரி. சுமார் 6.5 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இனி வீட்டிலிருந்து மிக மிக அருகில் உள்ளதால் அலுவலகத்துக்கு சூரி நடந்துதான் செல்லமுடியும்.

2009ல் வெளியான ‘வெண்ணிலா கபடிக் குழு’படத்துக்குப் பின்னர் சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சூரி, அடுத்தடுத்து லட்சங்களுக்கு மாறி பின்னர் நாள் ஒன்றுக்கு சில லட்சங்கள் சம்பளமாக வாங்க ஆரம்பித்தார். இடையில் சில தொய்வுகளைச் சந்தித்திருந்தாலும் எந்தவித பந்தாவுமின்றி சக சினிமாக்காரர்களுடன் பழகுபவர் என்பதால் அவருடைய மார்க்கெட் சரியவே இல்லை. சினிமா வருமானம் தவிர்த்து மதுரையில் அவர் நடத்தி வரும் ஹோட்டல்களிலும் பணம் கொட்டுவதால் சூரி காட்டில் அடைமழைதான்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?