விஷால் ஹீரோவா,வில்லனா,காமெடியனா? ... பூட்டு போட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை?

By vinoth kumarFirst Published Dec 24, 2018, 10:27 AM IST
Highlights

அதைவிட முக்கிய அஜெண்டாவாக பூட்டுப் போட்டவர்களுக்கு ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பி, அவர்களது எதிர்ப்பை நிரந்தரமாக காலி செய்யும் திட்டம்தான் விஷாலிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.


விஷால் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் தயாரிப்பாளர் சங்கத்தின் இரு அலுவலகங்களுக்குப் பூட்டுப்போடப்பட்ட சமாச்சாரம் தொடர்பாக இன்று மாலை விஷால் அணியினரின் கூட்டம் தயாரிப்பாளர் சங்கத்தின் சேம்பர் வளாகத்தில் நடைபெற உள்ளது.

எப்பாடுப்பட்டாவது இளையராஜா இசை நிகழ்ச்சியை தங்கு தடையின்றி நடத்துவதுதான் இந்த அவசரக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் என்று சொல்லப்பட்டாலும், அதைவிட முக்கிய அஜெண்டாவாக பூட்டுப் போட்டவர்களுக்கு ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்பி, அவர்களது எதிர்ப்பை நிரந்தரமாக காலி செய்யும் திட்டம்தான் விஷாலிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

எது எப்படியிருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி ஏற்ற நாளிலிருந்து, பலத்த போட்டியில் ஜெயித்த ஒரே காரணத்துக்காக ஹீரோ, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஒழுங்காக பதில் சொல்லாதவகையில் வில்லன், தமிழ்ராக்கர்ஸ் விவகாரம் உட்பட எல்லா சபதங்களிலும் தொடர்ந்து சொதப்பி வருவதால் காமெடியன் என்ற மூன்றுவிதமான கெட் அப்புகளுடனேயே நடமாடி வருகிறார் விஷால்.

மூன்று கெட் அப்கள் என்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஒரு பெரிய சங்கத்தலைவர் பதவிக்கு அது அவமானம். இந்தக் கூட்டத்தில் தொடங்கி மிகக் குறுகிய கால அவகாசத்துக்குள் தான் யார் என்று நிரூபித்துக்காட்டவேண்டிய அவசியம் விஷாலுக்கு ஏற்பட்டுள்ளது.

click me!