
சமீபத்தில் நடிகர் விஷால், தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தினர் அங்கு பஜ்ஜி, போண்டா சாப்பிட்டு கொண்டிருக்கின்றனரே தவிர வேறு எந்த ஒரு வேலையும் நடைபெற வில்லை என கூறினார்.
விஷாலின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு தயாரிப்பாளர் தாணு , நடிகர் விஷால் இப்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை எப்படி பேசலாம் என போராட்டம் நடத்த
முயன்றார்.
தொடர்ந்து பேசிய தாணு பல தோல்வி படங்களை கொடுத்து, பல தயாரிப்பாளர்களுக்கு கஷ்டத்தை கொடுத்து வரும் விஷால் தயாரிப்பாளர்களை பற்றி பேச எந்த அருகதையும் இல்லாதவர் என கூறினார்.
நடிகர் சங்கத்தினர் பலர் இவரது செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறியுள்ள தாணு, இது வரை விஷால் நடிப்பில் வெளியாகி தோல்வியை தழுவிய படங்களின் பட்டியலை வெளியிட்டார்.
தயாரிப்பாளர்கள் பற்றி தரைகுறைவாக வார்த்தைகள் கூறியதற்கு விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும் என தாணு தடாலடியாக கூறினார்.
அடுத்த மாதம் தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் நிலையில் இது போன்ற பிரச்சனைகள் விஷாலின் இமேஜை ரொம்ப டாமேஜ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.