
நடிகர் விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள். விஷால் நடிகர் சங்க தேர்தலில் நின்ற போது தன் முழு ஆதரவையும் கொடுத்து நடிகர் சங்கத்திற்காக பாடுபட்டவர் ஸ்ரீகாந்த்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீகாந்த் மிகவும் கோபமாக விஷாலை வார்த்தைகளால் தாக்கினார்.
இதில் இவர் பேசுகையில் ‘ஒருவர் நடிகர் சங்கத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவைப்பதாக கூறி நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷால்.
தற்போது , அந்த வேலையை விட்டு, விட்டு வேறு ஒரு சங்க தேர்தலில்(தயாரிப்பாளர் சங்கம்) போட்டிப்போட போகிறேன் என கூறுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தன்னை போலவே பல நடிகர்கள் உங்களை நம்பி வாக்களித்துள்ளனர், அவர்களை ஏமாற்றாதீர்கள் மனநிலையை புரிந்துக்கொள்ளுங்கள்’ என ஸ்ரீகாந்த் மறைமுகமாக விஷாலை தாக்கினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.