சமந்தா, பிரகாஷ் ராஜ், போன்ற பல நடிகர்களை கலங்க வைத்த முக்கிய பிரபலத்தின் மரணம்!

By manimegalai aFirst Published May 22, 2021, 11:51 AM IST
Highlights

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல நடிகர், நடிகைகளுக்கு மக்கள் தொடர்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த பி.ஏ.ராஜு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு சமந்தா, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
 

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல நடிகர், நடிகைகளுக்கு மக்கள் தொடர்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த பி.ஏ.ராஜு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு சமந்தா, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

சினிமா பத்திரிகையாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பி.ஏ.ராஜு மாரடைப்பு காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவரது மகன் சிவக்குமார் ட்விட்டரில் இதுகுறித்து பகிர்ந்து இவருடைய மரணம் குறித்த தகவலை உறுதி செய்தார். அந்த பதிவில்  “மிகுந்த துக்கத்தோடும் வருத்தத்தோடும் எங்கள் அன்புக்குரிய தந்தை பி.ஏ.ராஜு மரணமடைந்தார் என்பதை அறிவிக்கிறேன் என்றும்,  நீரிழிவு நோயால் அவதி பட்டு வந்த அவர், திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக தெரிவித்திருந்தார். அவரது ஆத்மா அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும். அப்பா என்றென்றும் ஒரு "ராஜு" ஆக இருங்கள், ஏனென்றால் நீங்கள் எங்கள் இதயங்களில் ஒரு "சூப்பர்ஹிட்". என மிகவும் உருக்கமாக அவரது மகன் தெரிவித்திருந்தார்.

ஒரு திரைப்பட பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பி.ஏ.ராஜு, பின்னர் தெலுங்கு திரையுலகில் திரைப்பட தயாரிப்பாளராக உயர்ந்தவர். தயாரிப்பாளராக அவரது முதல் படம் 2002 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படமான,  'பிரேமலோ பவானி கல்யாண்' படம் இதை தொடர்ந்து ஒரு சில படங்களையும் தயாரித்துள்ளார்.

அதே நேரத்தில் பல முன்னணி பிரபலங்களுக்கும் , பிரபலங்களின் படங்களுக்கும் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியுள்ளார். எனவே இவரது திடீர் மரணம் தெலுங்கு  திரையுலகையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பி.ஏ.ராஜு மரணம் குறித்து அறிந்த தெலுங்கு மற்றும் தமிழ் பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளம் மூலமாக தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக, சமந்தா  மகேஷ் பாபு, சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர்  இயக்குனர் ராஜமௌலி, சிரஞ்சீவி, மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் பி.ஏ.ராஜு உடனான நட்பு குறித்து தங்களுடைய பதிவில் வெளிப்படுத்தி, உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்த பதிவுகள் இதோ... 

He has been such a positive light in my life .. right from my first film .. every film that has released since then ..hit or flop .. he has always had a kind word to say . I will miss you terribly A terrible loss 🙏🙏🙏 pic.twitter.com/PeoV0RPqjQ

— Samantha Akkineni (@Samanthaprabhu2)

Not able to process the sudden demise of BA Raju garu. I've known him since my childhood. We travelled together for many years and I worked with him very closely. pic.twitter.com/N6gbW8DPxv

— Mahesh Babu (@urstrulyMahesh)

Truly shocked by the sudden demise of BA Raju garu. Losing a senior member like him, who has such a vast experience of working as a Film Journalist & PRO for over 1500 movies, is a void that cannot be filled.
You’ll be missed.

Rest in peace.

— rajamouli ss (@ssrajamouli)

The sudden demise of BA Raju Garu has left me in shock. As one of the most senior film journalists & PRO,he has contributed greatly to the Film Industry. I've known him since my earliest days in TFI. It is a huge loss.Praying for strength to his family. Rest in Peace Raju Garu 🙏🏻 pic.twitter.com/B5lytChlqW

— Jr NTR (@tarak9999)

Ahh .. No... this is devastating...too sudden...Raju Garu..... your love n support to the film fraternity will be missed .. thank you for always being there for everyone.. may his family have the strength to bear this pain.. will miss you pic.twitter.com/76e99vfWyt

— Prakash Raj (@prakashraaj)

Shocked and saddened by the sudden demise of B.A.Raju garu. My heartfelt condolences and prayers to the family.🙏🙏 pic.twitter.com/Vj3OMqdB8R

— Chiranjeevi Konidela (@KChiruTweets)

Well wisher and a dear friend of mine for 37 years.. ...RIP dear BA Raju Garu !! We will miss you ..The Telugu film industry will miss you!!🙏 pic.twitter.com/RLStqWbtoA

— Nagarjuna Akkineni (@iamnagarjuna)

Totally shocked to hear this :((

He spoke to me 2 days bak..Such a Lovely affectionate Human..

Always had been a great support since the beginning of my career🙏🏻🎶❤️

You will always be remembered for ur Legendary work dear Raju Garu 🙏🏻❤️ 💐❤️🙏🏻 pic.twitter.com/tZFSJk5ANm

— DEVI SRI PRASAD (@ThisIsDSP)

click me!