
கோலிவுட்டில் இயக்குநர்கள், பாடகர்கள், நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், சின்னத்திரை கலைஞர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து பலியாகி வருவது திரையுலகினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விவேக், நெல்லை சிவா, மாரி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் செல்லதுரை, ‘என்னடி முனியம்மா’ பாடல் புகழ் தெம்மாங்கு பாடகர் மற்றும் நடிகரான டி.கே.எஸ் நடராஜன், பவுன்ராஜ் ஆகியோர் மாரடைப்பு மற்றும் உடல் நலக்குறைவால் மரணமடைந்தனர்.
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த், பிரபல காமெடி நடிகர் பாண்டு, துணை நடிகர்கள் மாறன், நிதிஷ் வீரா ஆகியோர் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதை தவிர சின்னத்திரை பிரபலங்களும் மரணடைந்தது ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்தது. ஏற்கனவே கொரோனா 2வது அலைக்கு திறமையான கலைஞர்களை பறிகொடுப்பது போதாது என்று பல திடீர் மரணங்களும் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் நடித்து வெளிவந்த பில்லா பாண்டி படத்தின் எழுத்தாளர் எம்.எம்.எஸ் மூர்த்தி திடீரென காலமானார். இதுகுறித்து தம்முடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆர்.கே.சுரேஷ், “மிஸ் யூ மாமா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.