நீங்க நடிகை பிரியா பவானி ரசிகரா...? அப்போ இதை மிஸ் பண்ணிடாதீங்க...! 

Asianet News Tamil  
Published : Mar 07, 2018, 05:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
நீங்க நடிகை பிரியா பவானி ரசிகரா...? அப்போ இதை மிஸ் பண்ணிடாதீங்க...! 

சுருக்கம்

priyabavani movie release again

பிரபல தொலைக்காட்சியில், செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி பின் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக மாறினார். இவர் நடித்த முதல் சீரியலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

திரைப்படம்:

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தயாரித்த 'மேயாத மான்' என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியானது, மெர்சல் சுனாமியில் சிக்கிய இந்த படம் ரசிகர்களின் ஆதரவோடு நல்ல விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் மேயாத மான்:

இந்நிலையில், மேயாத மான் மெர்சல் படத்தின் ரிலீசின் போது வெளியானதால். விஜய் ரசிகர்கள் பலரால் கவனிக்கப்படாத படமாக மாறிவிட்டது. இதனால் இந்த படத்தை இந்த வாரம் வெள்ளிக்கிழமை மறு வெளியீடு செய்ய முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். 

தற்போது நடந்து வரும் ஸ்ட்ரைக் காரணமாக புதிய படங்கள் ஏதும் ரீலீஸ் ஆகாத நிலையில், இந்தப்படம் மீண்டும் ரீலீஸ் செய்ய உள்ளதால் மீண்டும் பிரியா பவானி ரசிகர்கள் இவரை வெள்ளித்திரையில் பார்த்து ரசிக்கலாம்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஈஸ்வரிக்கு தெரியவரும் உண்மை; குணசேகரன் முன்பே உடைக்கப்பட்ட சீக்ரெட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
மரண பயத்தை காட்டிய சிந்தாமணி... நாமினேஷன் வாபஸ் வாங்கும் முடிவில் மீனா..! சிறகடிக்க ஆசை அப்டேட்