
இதுவரை குத்துமதிப்பாக எழுதப்பட்ட செய்திகளுக்கு அதிகாரபூர்வமான அங்கீகாரம் வழங்கிவிடலாம் என நினைத்தாரோ என்னவோ தான் இயக்குநர் ஷங்கர் அலுவலகத்துக்குச் சென்றதையும் அங்கு ஷங்கர் தனக்கு ‘இந்தியன் 2’படத்தின் கதையை 2 மணிநேரம் சொன்னதையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் பெரும் நட்சத்திரக் கூட்டணி இணைந்திருப்பது குறித்த தகவல்கள் வெளிவருகின்றன.காஜல் அகர்வால் ஏற்கனவே படக்குழுவில் இணைந்துவிட்ட நிலையில் சித்தார்த், பிரியா பவானிசங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங் என முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதுவரை ஊர்ஜிதப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தான் இந்தப் படத்தில் இணைந்ததை பிரியா பவானிசங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனதுமுகநூல் பக்கத்தில், “ஷங்கர் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். படம் குறித்து இரண்டு மணி நேரம் எனக்கு விளக்கப்பட்டது. பிரதான கதாபாத்திரங்களில் ஒன்றாக எனது கதாபாத்திரம் இருக்க, உடனே நடிப்பதாக சம்மதம் தெரிவித்தேன். இதைத் தவறவிட நான் தயாராக இல்லை. ஷங்கர் கனிவுடன் பேசினார். இந்தப் பெரிய காரியத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். நான் பிரபஞ்சத்தை நம்புகிறேன். உங்கள் செயல்பாடுகளைப் பொறுத்து பிரபஞ்சம் உங்களுக்குத் திரும்பக் கொடுக்கும். கமல்ஹாசன், எனக்கு விருப்பமான சித்தார்த், குயின் லேடி காஜல் அகர்வாலுடன் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதை ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தனது நட்பு வட்டாரம் ஓவராக நச்சரித்ததால் தலையில் சத்தியம் செய்யச்சொல்லி அவர்களுக்கு ‘இந்தியன் 2’கதையை லீக் செய்துவிட்டாராம் பிரியா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.