
நடிகை பிரியா ஆனந்த் ராசியற்றவர் அவருடன் நடிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பதிவிட்ட ரசிகர் ஒருவர் பிரியா கொடுத்த செண்டிமெண்டான பதிலடியால் சரண்டராகி மன்னிப்பும் கேட்டார்.
ஆணழகன் என்கிற ட்விட்டர் ஐடியில் உள்ள ரசிகர் ஒருவர், தான் தற்செயலாக ஒரே நாளில் ஸ்ரீதேவியுடன் பிரியா ஆனந்த் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தையும் ,ஜே.கே. ரித்தீஷுடன் இதே பிரியா நடித்த ‘எல்.கே.ஜி’ படத்தைப் பார்க்க நேர்ந்ததாகவும், மேற்படி இருவரது மரணத்துக்கும் அவர்களுடன் நடித்த பிரியா ஆனந்தின் ராசிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்கிற ரீதியில் ஒரு பதிவு போட்டிருந்தார்.
இந்தப் பதிவைப் படித்தவுடன் அந்த ஆணழகனை பிளாக் செய்வதை விட்டுவிட்டு,’இப்படியெல்லாம் தவறான யூகங்களைப் பரப்புவதால் சம்பந்தப்பட்டவரின் மனம் எவ்வளவு வேதனையடைகிறது என்பதை உணராமல் எப்படி உங்களால் நடந்துகொள்ள முடிகிறது இப்படி?’ என்று செண்டிமெண்டாக அவருக்குப் பதில் போட்டார்.
பிரியாவின் நாகரிகமான அந்த பதிலை சற்றும் எதிர்பாராத ஆணழகன் ஒரே சீனில் திருந்தி நல்லவராக மாறினார். ’சிஸ்டர் நீங்க இதையெல்லாம் படிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை. அதுவுமில்லாத கோபப்படாம பொறுமையா எனக்குப் புத்தி சொன்னீங்களே நான் திருந்திட்டேன். மன்னிச்சுடுங்க. இனி யார் மனசும் புண்படுற மாதிரி பதிவுகள் போடவே மாட்டேன்’ என்று சரண்டராகியிருக்கிறார் அவர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.