’காமசூத்ரா’பட கதாநாயகி திடீர் மரணம்...கண்டுகொள்ளாத ஊடகங்கள்...

By Muthurama LingamFirst Published Apr 22, 2019, 11:31 AM IST
Highlights

2013ல் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான ‘காம சூத்ரா 3டி’ படத்தின் கதாநாயகி சாயிரா  கான் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று மும்பையில் காலமானார். ஆனால் என்ன காரணத்தாலோ வட இந்திய ஊடகங்கள் இச்செய்திக்கு முக்கியத்துவம் தரவில்லை.

2013ல் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான ‘காம சூத்ரா 3டி’ படத்தின் கதாநாயகி சாயிரா  கான் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று மும்பையில் காலமானார். ஆனால் என்ன காரணத்தாலோ வட இந்திய ஊடகங்கள் இச்செய்திக்கு முக்கியத்துவம் தரவில்லை.

இயக்குநர் ரூபேஷ் பவுல் இயக்கத்தில் 3டியில் உருவான, 'காமசூத்ரா' படத்தில் நடிக்க முதலில் நடிகை ஷெர்லின் சோப்ரா ஒப்புக்கொண்டார். சில காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் பல்வேறு பிரச்னைகளால் அந்தப் படம் ட்ராப் ஆனது. இதையடுத்து 2013-ம் ஆண்டு இப்படத்தில்  நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு பதிலாக நடிகை சாயிரா கான் நடித்திருந்தார். 

அவரது மறைவுச் செய்தி குறித்து கருத்துத் தெரிவித்த இயக்குநர் ரூபேஷ் பவுல்,’ சாயிரா கான் மிகத் திறமையான நடிகை. எனது காமசூத்ரா பட கேரக்டருக்கு அவ்வளவு சிறப்புச் சேர்த்திருந்தார். திரையுலகில் நல்லதொரு இடத்தை ஏன் அவரால் பிடிக்க முடியவில்லை என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.தற்போது அவரது மறைவுச் செய்தியைக் கூட பல ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து ஏனோ வெளியிடவில்லை. 

ஆச்சாரமான இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலில் அவர் என் படத்தில் நடிக்கவே மிகவும் தயங்கினார்.பின்னர் அவரைக் கன்வின்ஸ் செய்து நடிக்கவைத்தேன். ஆனால் முழுப் படத்தையும் பார்த்தபிறகு தான் ஒரு சரியான படத்தில்தான் நடித்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு அந்த வாய்ப்புக்காக எனக்கு நன்றி தெரிவித்தார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்கிறார் ரூபேஷ் பவுல்.

click me!