காவி வேஷ்டியில் வந்து என்னை கவிழ்த்த விஜயகாந்த்...!  முதல் முறையாக திருமணம் முதல் தேனிலவு வரை பகிர்ந்துக்கொண்ட பிரேமலதா..!

 
Published : May 14, 2018, 05:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
காவி வேஷ்டியில் வந்து என்னை கவிழ்த்த விஜயகாந்த்...!  முதல் முறையாக திருமணம் முதல் தேனிலவு வரை பகிர்ந்துக்கொண்ட பிரேமலதா..!

சுருக்கம்

premalatha vijayakanth share her marriage life

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் , தேமுதிக கட்சியில் வெற்றிகரமான அரசியல் தலைவராகவும், இருப்பவர் நடிகர் விஜயகாந்த். தற்போது முதல் முறையாக தன்னுடைய கணவர் விஜயகாந்த் தன்னை பெண் பார்க்க வந்த அனுபவம் முதல், தேனிலவு  வரை தனக்கு நேர்ந்த அனுபவங்களை மிகவும் சுவாரிஸ்யமாக பகிர்ந்துள்ளார் பிரேமலதா.

இது குறித்து அவர் கூறுகையில்... கல்லூரி படிப்பி முடிந்தவுடன் தன்னுடைய திருமணத்தை செய்து முடிக்க வேண்டும் என பெற்றோர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். எங்களுடைய திருமணம் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

முதலில்அவர்களுடைய குடும்பத்தினர் என்னைப் பார்த்ததும் பிடித்து போய் விட்டதால் சம்மதம் தெரிவித்துவிட்டனர். பின் தான் இறுதியாக என்னை பார்க்க கேப்டன் வந்தார், ஒரு பெரிய ஹீரோ எங்கள் வீட்டுக்கு வருவதால் அவரை எப்படி வரவேற்ப்பது என்பதில் எனது குடும்பத்தினர் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

தன்னை கேப்டன் பெண் பார்க்க வரும் போது, சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். அதனால் காவி வேஷ்டியில் தான் காரில் இருந்து இறங்கிவந்தார். அவரின் எளிமை தன்னுடைய குடும்பத்தினரை மிகவும் பிரமிக்க வைத்தது.

அவர் எங்கள் வீட்டிற்குள் வந்த 5 நொடியில், பெரியவர்கள் மீது காட்டிய மரியாதை. அடக்கமான பேச்சு, பெரிய நடிகர் என்று எந்த பந்தாவும் இல்லாமல் நடந்துக்கொண்ட விதம் அனைவரையும் கவர்ந்துவிட்டது. இதனால் இருவீட்டாரும் தங்களுடைய திருமணத்திற்கு பச்சை காட்டி விட்டனர்.

எங்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக மதுரையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் கேப்டன் படப்பிடிப்புகளில் மிகவும் பிஸியாக இருந்ததால் அதிகமாக எங்கும் வெளியே செல்லவில்லை.

பின் தாங்கள் தேனிலவிற்கு ஊட்டிக்கு சென்றோம். அதுவும் அங்கு படப்பிடிப்பு நடைப்பெற்றதால் தான். அவர் படப்பிடிப்பு நடைப்பெற்ற போது தன்னையும் உடன் அழைத்து சென்றார். அதுதான் தங்களுடைய தேனிலவும் கூட என வெக்கத்தோடு கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா... விஜயகாந்த், நடித்த 'உழவன் மகன்' திரைப்படத்தை பார்த்த பின் அவருடைய தீவிர ரசிகையாக மாறிவிட்டாராம். இவருக்கு பல பெண் ரசிகைகள் இருந்தார்கள். எப்படியும் வீட்டிற்கு ஒரு நாளைக்கு அவருக்கு 10 முதல் 1000 கடிதங்கள் வரை வரும். அவை அனைத்தையும் அவர் தான் படித்து பார்ப்பாராம். பலர் இவரை அண்ணன் என்று தான் உரிமையோடு எழுதி இருப்பார்கள். சில ரசிகர்கள் காதலோடு நீங்கள் ஏன், திருமணம் செய்துக்கொண்டீர்கள் என ஜாலியாக கேட்பார்கள் என தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்
ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்