இரண்டு பேருமே ஹெல்மெட் போடவில்லை. இந்தப் பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சாலையில் இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதைப் பார்த்த சென்னை போக்குவரத்து போலீசார் பிரசாந்த் மற்றும் அவரிடம் பேட்டி எடுத்த தொகுப்பாளர் இரண்டு பேருக்கும் ரூ.2000 அபரதாம் விதித்துவிட்டனர்.
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணம் செய்த நடிகர் பிரசாந்த் மற்றும் அவருக்குப் பின்னால் அமர்ந்து சென்றவருக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ரூ.2000 அபராதம் விதித்திருக்கிறது.
‘அந்தகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் பிரசாந்த். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு நடிகர் பிரசாந்த் புரமோஷன் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்காக ஒரு யூடியூப் சேனலுக்கு வித்தியாசமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.
அந்தப் பேட்டிதான் அவருக்கு வில்லங்கமாக மாறிவிட்டது. ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிக்கொண்டே பேட்டி கொடுத்தது தான் பிரச்சினைக்குக் காரணம். பிரசாத் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே, பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் கேள்விக்கு பதில் அளிக்கிறார்.
தாராள மனசைக் காட்டிய ஃபகத் பாசில், நஸ்ரியா! வயநாடு நிலச்சரிவுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி!
on reported violation. https://t.co/bAZecvNYgn pic.twitter.com/TqJVoLi9MT
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic)இரண்டு பேருமே ஹெல்மெட் போடவில்லை. இந்தப் பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சாலையில் இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதைப் பார்த்த சென்னை போக்குவரத்து போலீசார் பிரசாந்த் மற்றும் அவரிடம் பேட்டி எடுத்த தொகுப்பாளர் இரண்டு பேருக்கும் ரூ.2000 அபரதாம் விதித்துவிட்டனர்.
பட புரொமோஷனுக்காக சாலை விதிகளை மதிக்காமல் ஹெல்மெட் இல்லாம்ல வண்டி ஓட்டுவது சரியா என்று சில சின்சியர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். பிரபலங்கள் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் அவர்களே இப்படி விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்றும் அட்வைஸ் செய்கிறார்கள்.
ஆனால், இன்னும் நடிகர் பிரசாந்தின் தீவிர ரசிகர்களாக இருக்கும் 90s கிட்ஸ் இதுவும் அந்தகன் படத்துக்கு புரொமோஷன் தானே என்று கேஷுவலாகச் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும் அந்தகன் படம் ஹிட் ஆகப் போகிறது என்றும் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.
செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை தள்ளிவிட்டு சென்ற நடிகர் சிரஞ்சீவி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!