அக்ஷய்குமார் பாணியை பின்பற்றும் பிரசன்னா...

 
Published : Apr 02, 2017, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
அக்ஷய்குமார் பாணியை பின்பற்றும் பிரசன்னா...

சுருக்கம்

prasanna acting telugu movie

பாலிவுட் நாயகர்கள் அக்சயகுமார், விவேக் ஓபராய் ஆகியோர்கள் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் ஹீரோ ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
ஃபைவ் ஸ்டார் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பல தமிழ் படங்களில் நாயகனாக நடித்த பிரசன்னா, மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' படத்தில் வில்லனாகவும்  நடித்தார். 

அதன்பின்னர் பல படங்களில் ஹீரோ மற்றும் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தற்போது 'திருட்டுப்பயலே 2', 'துப்பறிவாளன்', மற்றும் 'பவர்பாண்டி' ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்
 
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம்தேஜ் புதிய ஆக்சன் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க தற்போது பிரசன்னா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தயாரிப்பாளராக அறிமுகம் கொடுக்க உள்ளதாக அவர் பற்றி ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவர் மீண்டும் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!