கவிஞர் குட்டி ரேவதியுடன் கைகோர்க்கும் பிரசன்னா...

 
Published : Apr 29, 2017, 06:05 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
கவிஞர் குட்டி ரேவதியுடன் கைகோர்க்கும் பிரசன்னா...

சுருக்கம்

pranna acting kutty revathy direction

தனுஷ் நடித்த 'மரியான்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'நெஞ்சே எழு' என்ற பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த அற்புதமான பாடலை எழுதியவர் கவிஞர் குட்டிரேவதி. இவர் தற்போது இயக்குனராகி ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
 
சமீபத்தில் தனுஷின் ப.பாண்டி படத்தில் ராகவன் என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற பிரசன்னா தான், குட்டி ரேவதி இயக்கும் முதல் படத்தின் நாயகன். பிரசன்னா இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கின்றார்.
 
ஐபிஎஸ் முடித்துவிட்டு முதல் நாள் பணியில் சேரும்போது மிக முக்கிய வழக்கு ஒன்று சிக்குகிறது. அந்த வழக்கை பிரச்சன்னா எப்படி கையாள்கிறார் என்பதுதான் கதை. இந்த படத்தின் வசனத்தை பத்திரிகையாளர் பரிதியுடன் இணைந்து எழுதுகிறார் குட்டி ரேவதி. 

இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
நிலம், நீர், காற்று, பணம்-எல்லாத்துக்கும் மதிப்பு கூடிக் கொண்டே போகுது: - மிரட்டலாக வெளியான ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட டீசர்!