பிரதியுஷாவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நண்பர்கள்...! பத்திரிகையாளர்கள் முன் கதறி அழுத தாய்...! 

 
Published : Oct 31, 2017, 12:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
பிரதியுஷாவை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நண்பர்கள்...! பத்திரிகையாளர்கள் முன் கதறி அழுத தாய்...! 

சுருக்கம்

pradiusha mother cry for press

தெலுங்கு திரையுலகில் 'ராயுடு' திரைப்படத்தின் மூலம் 1998 ஆம் ஆண்டு அறிமுகம் கொடுத்தவர்  நடிகை பிரதியுஷா. தமிழில் இவர் நடித்த முதல் படமான மனுநீதி மிகப் பெரிய வெற்றி பெற்றது.இதனால் இவருக்கு தமிழிலும் நடிக்க பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களால் முன்னணி கதாநாயகியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.  இந்நிலையில் திடீர் என இவரும் இவருடைய காதலரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்தத் தற்கொலை முயற்சியில் இவருடைய காதலர் மட்டும் காப்பாற்றப்பட்ட நிலையில் பிரதியுஷா பரிதாபமாக இறந்தார். ஆனால் பிரதியுஷாவின் தாயார் தன்னுடைய மகள் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை என்றும், கொலைசெய்யப்பட்டார் என்றும் கூறி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடரப்பட்டு, 15 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.  இந்நிலையில்  பிரதியுஷாவின் தாயார் இந்த வழக்கு குறித்து தீடீர் என ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார். 

இதில் என் மகள் தற்கொலை செய்துகொண்டு இறக்கவில்லை.  அவள் விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பலர் சேர்ந்து  பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவியுள்ளனர். ஆனால் அவள் விஷம் குடித்து இறந்தார் என்று கூறி நாடகம் ஆடி வருகின்றனர் எனக் கூறினார்.

மேலும் பிரதியுஷா இறந்தபோது அவருடைய உடலில் நிறைய  காயங்கள் மற்றும் நகக்கீறல்கள் இருந்தன. தற்போது வரை இதனை நிரூபிக்க நான் தனியாக போராடி வருகிறேன். ஆனால் இறுதியில் என் மகள் தற்கொலை செய்துகொண்டு இறந்தார் எனக் கூறி குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள் என்று பத்திரிகையாளர்கள் முன் கதறி அழுதார்.

பிரத்யுஷா இறந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவருடைய சகோதரரும் மனநலம் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!