
வடிவேலுக்கு ரெட் கார்ட் :
இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் ஆரம்பித்த பிரச்சனையால், நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடாது என்று ரெட் கார்ட் தரப்பட்டது. இதன் முதல் பாகம் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியை கண்டிருந்த நிலையில் இந்த ரெட் கார்ட் விவகாரம் வடிவேலுக்கு பின்னடைவை தந்தது. ஆனாலும் மீம்ஸ் மூலம் அனைவருடனும் பயணித்தார் வடிவேலு.
வடிவேலுவின் நாய் சேகர் Returns:
இதையடுத்து திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு ரெட் கார்ட் கெடுக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு ...Actor Yash : வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயனுக்கு கே.ஜி.எஃப் நாயகன் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஃபர்ஸ்ட் லுக் :
இந்த படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும், இந்த படத்தின் நாய்களுடன் வடிவேலு செம்ம கெத்தாக அமர்ந்திருக்கும் போஸ்டர் சமீபத்தியில் வெளியாகியிருந்தது.
வடிவேலுவுடன் விஜய் டிவி பிரபலங்கள் :
வைகை புயலின் நாயகனாக மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ள இந்த படத்தின் ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. அதோடு லண்டனில் ஒரு பாடலும் படமாக்கப்பட்டு விட்டது.
மேலும் செய்திகளுக்கு ...Santhanam: தமிழ் திரையுலகில் காமெடி நடிகர் என்பதை தாண்டி..கன்னட ஹீரோவாகும் சந்தானம்..?
பிரபுதேவா உடன் வடிவேலு :
இந்நிலையில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் வடிவேலு பாடவுள்ள பாடலுக்கு நடனப் பயிற்சி அளிக்க நடிகர் பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு - பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மேலும் இப்பாடலில் பிரபுதேவா ஒரு காட்சியில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது. இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக வடிவேலு - பிரபு தேவா இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.ன் இதில் வடிவேலுவின் மிக பேமஸான சிங் இன் தி ரெயின் பாடலை வைப்புயல் செம ரியாக்சனுடன் பாடியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.