
உலகமே சினிமாவையே புருவத்தை உயர்த்திப்பார்க்க வைத்த படம் தான் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி ஹாலிவுட்டை மிஞ்சிய பிரமாண்டத்தையும் யாருமே எதிர்பார்க்காத பிரமிப்பையும் உலகத்திற்கு பறைசாற்றியது. இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் கடந்த 2015ல் ஆண்டு வெளியான ‘பாகுபலி ’ தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.
சினிமாவை பொறுத்தவரை எந்தவொரு நடிகரும் படத்தை ஒரு முடித்துவிட்டு, அடுத்தப் படத்துக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், பாகுபலி’ படத்தின் 2 பாகங்களுக்கும் சேர்த்து 4 ஆண்டுகளுக்கு மேல் ஒதுக்கி நடித்து முடித்துள்ளார் பிரபாஸ்.
இந்த படத்தில் பிரபாஸின் உழைப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. ஒரு நடிகர் சினிமா மீது கொண்ட காதலினாலும், ரசிகர்கள் மீது கொண்ட பாசத்தினாலும் எதுவும் செய்யக்கூடுமா? என்று அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்திருக்கிறது.
ஒரே படத்தில் இரு உடல் தோற்றங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல சிவா பாத்திரத்துக்காக சற்று இளைத்தும் தெரிய வேண்டும், பாகுபலி பாத்திரத்திரத்திற்க்காக சற்று மிரட்டலாக வீரனைப்போல தோற்றமளிக்க 3 வருடங்களாக அவருடைய உடலமைப்பை மாற்றிக் கொண்டே இருந்தார்.
பிரபாஸின் இந்த அயராத உழைப்பும், அபார அர்ப்பணிப்பும் ‘பாகுபலி’ படத்துக்கு கிடைத்துள்ள பிரமாண்டமான வெற்றியும், பிரபாஸ் மீதான ஈர்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளதை பாலிவுட் திரையுலகம் உணர்ந்துள்ளது. முதல் பாகத்தின் ரிலீஸின்போது பெற்ற வெற்றியைவிட மிகப்பெரிய வெற்றியாக உலகம் முழுக்க பாகுபலி திரைப்படத்தின் இந்தி வெர்ஷன் 1000 ஸ்கிரீன்களின் மறுபடியும் ரிலீஸ் செய்து சாதனை படைக்கப்படவிருக்கிறது.
இதனையடுத்து பல்வேறு பாலிவுட் இயக்குநர்கள் அவரை இந்தி படத்தில் நடிக்க வைக்க அணுகுகிறார்கள். ஆனால், தென்னவனோ 2 படங்கள் முடித்துவிட்டு நல்ல கதைகள் வந்தால் இந்திக்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம்.
இந்திய திரையுலகின் பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட பிரபாஸின் பிரமாண்டமான இந்த வியாபாரம் இந்தி திரையுலகின் 'கான்' நடிகர்களுடைய வியாபாரத்தை புரட்டிப்போட்டு பந்தாடியுள்ளது தான் பாலிவுட் தயாரிப்பாளர்களின் பார்வை திரும்பியதற்கு காரணம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.