
Prabhas Raja Saab Teaser Released : யங் ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ராஜா சாப். மருதி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. பிரபாஸுக்கு ஜோடியாக நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் ஆகியோர் கதநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் ஜெயராம், சஞ்சய் தத், அனுபம் கெர், ஜரீனா வஹாப், பிரியதர்ஷி, வெண்ணெல கிஷோர், பிரம்மானந்தம் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நீண்ட காலமாக தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஜூன் 16 அன்று ராஜா சாப் டீசரை வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்தது. சமீபத்தில் டீசர் ஆன்லைனில் கசிந்ததால் படக்குழுவும், ரசிகர்களும் கவலை தெரிவித்தனர். இருந்தாலும், டீசர் கசிவு, அசல் டீசர் அளிக்கும் அனுபவத்தைப் பாதிக்கக்கூடாது என்று படக்குழு நம்புகிறது.
டீசர் மீதான ஹைப் ஏற்றும் வகையில், படக்குழு நேற்று ப்ரீ டீசரை வெளியிட்டு இருந்தது. இந்த ப்ரீ டீசரில், நாயகிகள் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகிய மூவரும் எதையோ ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இந்த மூவரும் எதையோ பார்த்து பயப்படுவது போல் ப்ரீ டீசரில் காட்டப்பட்டுள்ளது. ப்ரீ டீசரில் தமனின் பின்னணி இசை அருமையாக இருந்தது.
இந்த நிலையில் ராஜா சாப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. ஆன்லைனில் மட்டுமல்லாமல், தெலுங்கு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டு உள்ளது. ராஜமுந்திரி, காக்கிநாடா, கஜுவாகா, அமலாபுரம், அனகாபள்ளி, ஒங்கோல், விஜயவாடா, மசூலிப்பட்டினம், பீமவரம், கடப்பா, புரோதத்தூர் போன்ற இடங்களில் உள்ள திரையரங்குகளில் ராஜா சாப் டீசர் வெளியிடப்பட்டது.
டீசரின் மூலம் இப்படம் நகைச்சுவை நிறைந்த திகில் படமாக இருக்கும் என தெரிகிறது. ஆனால் இந்த டீசரில் காட்டப்பட்டுள்ள ஆக்ஷன் காட்சிகள் தெலுங்கு ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆனாலும், மற்ற மொழி ஆடியன்ஸுக்கு சற்று கிரிஞ்சாகவே இருக்கிறது. ஏனெனில் ஒரே நேரத்தில் 20 பேர அடித்து பறக்க விடும் பாலய்யா பட பைட்டுகளை ராஜா சாப் பட டீசரிலும் பார்க்க முடிகிறது.
அதேபோல் இந்த டீசரில் பிரபாஸின் லுக் ரசிகர்களை கவரும்படி இருந்தாலும், இதில் இடம்பெற்றுள்ள வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் படுமோசமாக இருக்கிறது. இப்படம் பான் இந்தியா படமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், மற்ற மொழிகளிலும் இது கனெக்ட் ஆகுமா என்பது டீசரிலேயே கேள்விக்குறியாக உள்ளது. இந்தப் படம் டிசம்பர் 5 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.