'கே.ஜி.எஃப்' பட இயக்குனரின் பிரமாண்ட படைப்பில் பிரபாஸ்..!

By manimegalai aFirst Published Dec 2, 2020, 5:00 PM IST
Highlights

'கே.ஜி.எஃப்' படத்தின் வித்தியாசமான கதை மூலம், உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்,  பிரஷான்த் நீல் பாகுபலி நாயகன் பிரபாசுடன் இணைய உள்ள படம் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. 
 

'கே.ஜி.எஃப்' படத்தின் வித்தியாசமான கதை மூலம், உலக மக்களையே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்,  பிரஷான்த் நீல் பாகுபலி நாயகன் பிரபாசுடன் இணைய உள்ள படம் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

இந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது 'யுவரத்னா' மற்றும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்த படத்தின் தயாரிப்பை அறிவித்துள்ளது.

ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் அடுத்ததாக பாகுபலி நாயகன் பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள 'சலார்' என்கிற படத்தை, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாரிக்க உள்ளனர்.

'கே.ஜி.எஃப்' படத்தின் மூலம் ரசிகர்களை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் தான் இந்த படத்தையும் இயக்கவுள்ளார். இந்த படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளது.
தற்போது 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' பணிகளில் இருக்கும் பிரஷான்த் நீல், அதை முடித்துவிட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். 

இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பு குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகண்தூர் கூறுகையில் பிரபாஸ் மற்றும் பிரஷான்த் நீல் இருவரையும் இந்த மிகப்பெரிய படத்தில் இணைப்பதில் மிகுந்து மகிழ்ச்சியடைகிறேன் என்றும், ஹொம்பாளே பிலிம்ஸ் தங்கள் முதல் படத்தில் இருந்தே சினிமாத் துறையில் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கி வருகிறது. ''சலார் ' படத்தை நாடு முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக உருவாக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தயாரிப்பின் மூலம் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது ஹொம்பாளே பிலிம்ஸ். இதுவரை இந்தியத் திரையுலகில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும், 2 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிட்டதில்லை. 'கே.ஜி.எஃப் சேப்டர் 1', 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் - பிரஷான்த் நீல் படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது இந்திய அளவில் அடுத்ததொரு பிரம்மாண்ட படைப்பு என தெரிவித்துள்ளார்.

click me!