பிக்பாஸ் கொடுத்த நியூ டாஸ்க்கால் வந்த புதிய பிரச்சனை..! இதிலும் குரூப்பிஸம் எட்டி பார்க்குமா?

Published : Dec 02, 2020, 01:07 PM IST
பிக்பாஸ் கொடுத்த நியூ டாஸ்க்கால் வந்த புதிய பிரச்சனை..! இதிலும் குரூப்பிஸம் எட்டி பார்க்குமா?

சுருக்கம்

ஏற்கனவே தற்போது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும், கால் சென்டர் டாஸ்க்கால் பல பிரச்சனைகள் வீட்டில் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது... புதிய டாஸ்க் மூலம் நியூ பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார் பிக்பாஸ்.  

ஏற்கனவே தற்போது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும், கால் சென்டர் டாஸ்க்கால் பல பிரச்சனைகள் வீட்டில் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது... புதிய டாஸ்க் மூலம் நியூ பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார் பிக்பாஸ்.

ஏற்கனவே ஒரு வாரத்தின் பெஸ்ட் போட்டியாளர்கள் இருவரை தேர்வு செய்யவே, கடும் போட்டி நிலவி வரும் நிலையில்.... கால் சென்டர் டாஸ்கில் நன்கு விளையாடிய போட்டியாளர் யார்? அதிக ஈடுபாடு இல்லாமல் விளையாடியவர் யார் என்பதை, 1 முதல் 13 எண்கள் வரை வரிசை படுத்த சொல்கிறார் பிக்பாஸ்.

இதுகுறித்த தகவலை அனிதா பிக்பாஸ் அறையில் ஒருபுறம் படிக்க, இந்த டாஸ்க்கில் வரிசை படுத்துவதற்காக சில போட்டியாளர்களுக்குள் வெளியே நடக்கும் விவாதமும் காட்ட படுகிறது.

வழக்கம் போல் அர்ச்சனாவின் குரல் ஓங்கி கேட்க, தனக்கு பிடித்தவர்களையே இதிலும் முன்னிறுத்தி விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரிசை படுத்துதலிலும் குரூப்பிஸம் எட்டி பார்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு