#BREAKING டி.ராஜேந்தர் ஆட்டம் ஆரம்பம்... உதயமானது தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 2, 2020, 11:18 AM IST
Highlights

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் கள்ள ஓட்டால் தான் தோற்கடிக்கப்பட்டதாக கூறும் டி.ராஜேந்தர், தற்போது தேர்தலில் தோல்வியடைந்தவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து புதிதாக ஒரு சங்கத்தை ஆரம்பித்துள்ளார். 

பல கட்ட சட்டப்போராட்டங்களையும் கடந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் கடந்த22ம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வியடைய தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார் மனு அளித்தார். 

தேர்தலில் போலியான ஆவணங்கள் அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டது என்று குற்றம் சாட்டினார். வாக்களித்த 1050 வாக்காளர்கள் பட்டியல் அவர்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு வேண்டும் என்றும் வேண்டும் கேட்டிருந்தார். ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனக்கூறி இயக்குநர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். 

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் கள்ள ஓட்டால் தான் தோற்கடிக்கப்பட்டதாக கூறும் டி.ராஜேந்தர், தற்போது தேர்தலில் தோல்வியடைந்தவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து புதிதாக ஒரு சங்கத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என பெயரிடப்பட்டுள்ள அந்த சங்கத்தை டிசம்பர் 5ம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்று வரும் இதே நாளில் டி.ராஜேந்தர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு குட்டையைக் குழப்பியுள்ளார். 

click me!