ஒரு ஹிட்டு கொடுத்து எட்டு வருஷமாச்சு...’பொட்டு’ படமாவது பரத்தைக் காப்பாற்றுமா?...

Published : Mar 04, 2019, 11:22 AM IST
ஒரு ஹிட்டு கொடுத்து எட்டு வருஷமாச்சு...’பொட்டு’ படமாவது பரத்தைக் காப்பாற்றுமா?...

சுருக்கம்

சுமார் மூன்று வருடங்களுக்கு படப்பிடிப்பு துவங்கப்பட்ட, ஏழெட்டு முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட பரத்தின் ‘பொட்டு’ படம் ஒருவழியாக வரும் 8ம் தேதி ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. ஹிட்டு என்ற வார்த்தையை நடிகர் பரத் கேட்டு எட்டு வருடங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் இப்படமாவது அவரைக் காப்பாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


சுமார் மூன்று வருடங்களுக்கு படப்பிடிப்பு துவங்கப்பட்ட, ஏழெட்டு முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட பரத்தின் ‘பொட்டு’ படம் ஒருவழியாக வரும் 8ம் தேதி ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. ஹிட்டு என்ற வார்த்தையை நடிகர் பரத் கேட்டு எட்டு வருடங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் இப்படமாவது அவரைக் காப்பாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.வடிவுடையான் இயக்கத்தில் பரத் நாயகனாக நடித்துள்ள படம் ‘பொட்டு’. இந்தப் படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகிய மூவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, படம் தள்ளிப்போன நிலையில், இப்போது இப்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பின்னணியில் ஹாரர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற 8 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்துப் பேசிய இயக்குனர் வடிவுடையான்.'’பரத் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸ்    ஆகிறது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம்.

மருத்துவக் கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள படு பயங்கரமான ஹாரர் படம் இது. இந்த  படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார், அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றிக் அந்த கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். படம் குழந்தைகள் முதல் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்றார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்