கையில் கட்டோடு 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் பிரகாஷ் ராஜ்..! லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

Published : Aug 18, 2021, 03:57 PM IST
கையில் கட்டோடு 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் பிரகாஷ் ராஜ்..! லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

சுருக்கம்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்தின், படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ளது.  

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்தின், படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ளது.

மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் விக்ரம், ஜெய்ராம்,  சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின்,  த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஏ.ஆர். இசைக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கலைக்கு தோட்டாதரணி என ஜாம்பாவன்கள் டீம் களமிறங்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும், அதிகரித்துள்ளது. 

அதிலும் குறிப்பாக மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கியுள்ளதால் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சமீபத்தில் பிரபல வார இதழில் யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் கெட்டப் ஓவியத்துடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டப்பட்டது. பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம் ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா நடிப்பது உறுதியாகியுள்ளது. மணிரத்னத்தின் ஃபேவரைட் ஹீரோயினான ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. 

அரங்குகள் அமைக்காமல் மலை மற்றும் வனப்பகுதிகளில் பெரும்பகுதியான படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. சுமார் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து இருப்பதாகவும் இன்னும் ஒரு மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க பொன்னியின் செல்வன் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. தற்போது படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக, மத்திய பிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர். இதுகுறித்து தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ஓர்ச்சாவில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பை நடத்த பொன்னியின் செல்வன் படக்குழு படையெடுத்துள்ளனர். மிகவும் பழமையான நகரமான ஓர்ச்சா, அரண்மனை நகரம் என்று அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க அரண்மனைகளும் கோவில்களுமே நிரம்பியுள்ள இங்குதான், தற்போது படக்குழுவினர் சென்றுள்ளனர். சமீபத்தில் தான் இவருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில்... கையில் கட்டோடு கார்த்தி மற்றும் இயக்குனர் மணிரத்னத்துடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இரண்டு பாகமாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் கோடையில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!