பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது இராஜராஜ சோழனின் சரித்திரத்தை கூறும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு, இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது படக்குழு. இந்நிலையில், அருண்மொழி வர்மன் இராஜராஜ சோழன் ஆகிறான் என்கிற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.
இதில், பொன்னியின் செல்வன் கதை குறித்தும், இதன் உண்மை வரலாறு குறித்தும் அறிந்த... சிலர் பேசுகிறார்கள். டாக்குமென்ரி வீடியோவை போல் இதனை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் அருள்மொழி வர்மன் என்கிற ராஜராஜ சோழனின் பெயர், 'பொன்னியின் செல்வன்' படத்தில் அருண்மொழி வர்மன் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாகவே இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
சுந்தர சோழன் என்றும் இரண்டாம் பராந்தகன் என்றும் அழைக்க கூடிய.. சோழ மன்னனின் இளைய மகன் தான் ராஜராஜ சோழன் என்கிற அருண்மொழி வர்மன் என ஒருவர் கூறுவதும், இவரை தொடர்ந்து பேசும் மற்றொருவர், அருண்மொழி பெருமாள் அல்லது அருண்மொழி வர்மன் என்பது தான் அவரது இயற்பெயர் என கூறி அதற்கான சில விளக்கங்களையும் கொடுக்கிறார். சோழ காலத்து செப்பேடுகளில் கூட அருண்மொழி என்றே இருந்ததாக இந்த வீடியோவில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அருண்மொழி வர்மன் பிற்காலத்தில் சோழ மன்னன் ஆகும் போது ராஜராஜ சோழன் என்கிற படத்தை பெறுகிறார் என தெரிவிக்கிறார்கள்.
மேலும் கல்கிக்கு இதை கொடுத்தது நீலகண்ட சாஸ்திரி என்பவர் தான் என்றும், அவரது ஆராய்ச்சி குறிப்புகளை அடிப்படையாக கொண்டே இந்த நாவல் எழுத பட்டதாகவும், இதற்க்கு சரித்திரம் சான்றுகளுடன் உள்ளது. அரியணை ஏறும் சமயத்தில், இது எனக்கு வர வேண்டியது அல்ல என, இராஜராஜ சோழன் தள்ளி நின்றது பிரமிக்க வைத்ததாக இந்த வீடியோவில் கூறுவது இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.