பட்டு வேட்டி, சட்டையில் பொங்கல் கொண்டாடிய விஜய்... “மாஸ்டர்” டீம் உடன் செம்ம மாஸாக வெளியான வீடியோ...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 15, 2021, 2:05 PM IST
Highlights

இதனிடையே கடந்த ஆண்டு மாஸ்டர் டீம் உடன் நடிகர் விஜய் பொங்கல் கொண்டாடிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்த்னு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். மாஸ்டர் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது.

பொங்கல் ஸ்பெஷலாக போகியன்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டன. தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட போதும், ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதிகாலை முதலே தியேட்டர்களில் காத்திருந்து ரசிகர்கள் படத்தை கண்டு களித்தனர். 

3 மணிநேரம் படம் என்பதால் சற்றே சோர்வு ஏற்படுவதாக கருத்துக்கள் வெளியானாலும், படத்தின் மீதான விமர்சனமும், வசூல் குறித்த தகவல்களும் கோலிவுட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா லாக்டவுனால் நொந்து போன தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் மாஸ்டர் ரிலீசால் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனிடையே கடந்த ஆண்டு மாஸ்டர் டீம் உடன் நடிகர் விஜய் பொங்கல் கொண்டாடிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: பிக்பாஸ் வனிதா வீட்டில் நடந்த விசேஷம்... வாழ்த்துக்களுடன் வைரலாகும் போட்டோ...!

பட்டு வேட்டை, சட்டையில் செம்ம மாஸாக தளபதி விஜய்யும், பாவாடை, தாவணியில் மாளவிகா மோகனனும், ஓட்டுமொத்த டீமே பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபாடு நடத்தியுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 

Here's a glimpse of how we celebrated Master Pongal this time, last year! 🤩

Kondaattam kalai kattatum nanba! Happy Pongal ❤️ pic.twitter.com/1T2Df42VfU

— XB Film Creators (@XBFilmCreators)
click me!