விஷாலின் கடன் புகார் எதிரொலி... நேரில் ஆஜராக இருதரப்புக்கும் போலீசார் சம்மன்!

By manimegalai aFirst Published Jun 12, 2021, 7:50 PM IST
Highlights

நடிகர் விஷால், பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது, காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்த சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து விசாரணை  செய்ய போலீசார் விஷால் மற்றும் ஆர்.பி.சொத்ரி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 
 

நடிகர் விஷால், பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மீது, காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்த சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து விசாரணை  செய்ய போலீசார் விஷால் மற்றும் ஆர்.பி.சொத்ரி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகர் விஷால் இரும்புத்திரை படத்திற்காக, தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் ரூபாய் 3 கோடி கடன் பெற்றதாகவும், இந்த தொகையை உரிய நேரத்தில் திருப்பி கொடுத்த பின்னரும், கடன் பெற்றதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பெறப்பட்ட உறுதி மொழி பத்திரத்தை கொடுக்கவில்லை என காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். 

விஷாலின் இந்த புகாருக்கு ஆர்.பி.செளத்ரி தரப்பில் இருந்து  இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்த 'இரும்புத்திரை' படத்திற்காக, என்னிடமும்,  திருப்பூர் சுப்பிரமணியத்திடமும் கடன் பெற்றார். அது தொடர்பான ஆவணங்கள், ஆயுதபூஜை படத்தை இயக்கிய சிவகுமாரிடம் இருந்தது. கடன்கள் பற்றிய விஷயங்களை அவர் தான் கவனித்து வந்தார். 

அதே நேரத்தில், விஷால் கடனை திருப்பி கொடுக்கும் போது அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் பொறுப்பில் இருந்த ஆவணங்களை எங்கு வைத்தார் என்பது தெரியாததால் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. விஷால் பணத்தை திருப்பி தந்த போது, அதனை பெற்றுக் கொண்டதாக நாங்கள் எழுதி கையொப்பம் போட்டு கொடுத்துள்ளேன்.  ஆனால் ஒருவேளை தொலைந்த ஆவணங்கள் கிடைத்தால் அவருக்கு எங்கள் தரப்பில் இருந்து பிரச்சனை வருமோ என்கிற பயத்திலேயே இந்த புகாரை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தற்போது இந்த கடன் புகார் தொடர்பாக நடிகர் விஷால் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சொத்ரி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பி முறையாக விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆர்.பி.சொத்ரி சென்னையில் இல்லை என்று கூறப்படும் நிலையில், இவரது சார்பில் அவரது வழக்கறிஞர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!