ரெண்டு பொண்டாட்டிக்காரனாச்சேன்னு இரக்கம் காட்டாமல் கைது செய்த போலீஸ்...அப்படி என்னதான் செஞ்சாரு?...

Published : Mar 20, 2019, 09:26 AM IST
ரெண்டு பொண்டாட்டிக்காரனாச்சேன்னு இரக்கம் காட்டாமல் கைது செய்த போலீஸ்...அப்படி என்னதான் செஞ்சாரு?...

சுருக்கம்

பாவம் ரெண்டு பொண்டாட்டிக்காரராச்சே என்று கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் தொலைக்காட்சி தொடர்களுக்கு கதை, வசனம் எழுதி வந்த ஒருவரை மும்பை போலீஸார் ஈவு இரக்கமின்றி கைது செய்துள்ளனர். அவர் அப்படி ஒன்றும் பெரிய தவறு செய்துவிடவில்லை ஜெண்டில்மென். மனைவிகளின் பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்க கள்ள நோட்டு அடித்திருக்கிறார் அவ்வளவுதான்.

மகாராஷ்டிரா மாநிலம் நாலாசோபாராவைச் சேர்ந்தவர் தேவ்குமார் பட்டேல். இவர் டி.வி. தொடர்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதி வந்தார். பட்டேலுக்கு இரு மனைவிகள். இருவரையும் பொருளாதார ரீதியாக சமாளிக்க பட்டேல் சிரமப்பட்டார். எனவே இந்த பிரச்னைக்கு தீர்வு காண அவரது டெலிவிஷன் வருமானம் போதவில்லை. எனவே பிரசினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கள்ள நோட்டுக்களை அச்சடிப்பது என்று முடிவு செய்தார். இதன்படி கள்ளநோட்டுக்களை அச்சடித்து விநியோகம் செய்து வந்தார். இதுபற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

போலீசார் விசாரணை நடத்தி பட்டேல் ஜோகேஸ்வரிக்கு வந்த போது அவரை தடுத்து விசாரணை நடத்தினர். பட்டேலின் கையில் ஒரு பை இருந்தது. அதை போலீசார் சோதனை செய்தபோது உள்ளே கத்தை கத்தையாக ரூ.5 லட்சம் பெருமானமுள்ள ரூ.2000, ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.100 கள்ள நோட்டுக்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பட்டேலின் ஒரு மனைவி குடும்பத்தலைவி என்றும் மற்றவர் மாடல் அழகி என்றும் போலீசார் தெரிவித்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!