கோடிக்கணக்கில், பண மோசடி செய்து விட்டு, இரண்டு வருடம் மறைந்து வாழ்ந்த நடிகையை, சிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்து செய்துள்ளனர்.
கோடிக்கணக்கில், பண மோசடி செய்து விட்டு, இரண்டு வருடம் மறைந்து வாழ்ந்த நடிகையை, சிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்து செய்துள்ளனர்.
நடிகை திஷா சவுத்ரி, ட்ரீம் ஜிகே இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் ரியல் எஸ்டேட் என்கிற பெயரில், லக்ஸூரியஸ் வீடு கட்டி தருவதாக பலரிடம் பணம் வசூலித்து, ரூ. 375 கோடி ரூபாய் மோசடி செய்தார்.
இந்த வழக்கில் அவரை போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்தனர். பின் பெயிலில் வெளிவந்த இவர், இரண்டு வாரங்கள் கழித்து தன்னுடைய குழந்தைகளுடன் தலைமறைவானார்.
இதை தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் சென்றது. தலைமறைவான திஷா சவுத்ரியை, தீவிரமாக தேடிவந்த போலீசார், மும்பையில் அவர் இருப்பதை கண்டு பிடித்தனர். இதை தொடர்ந்து, ஒரு சிறிய வீட்டில் இருப்பதாக அறிந்த சிஐடி போலீசார் திஷா சகோதரியை கைது செய்துள்ளனர். திஷா சவுத்ரி பாலிவுட் திரையுலகில் 'அனுராதா' என்கிற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.