துரந்தர் 2-வில் மோடி... அரங்கம் அதிர விசில் பறக்கும் பிரதமரின் சீன் வைரல்

Published : Mar 19, 2026, 03:35 PM IST
 Dhurandhar 2

சுருக்கம்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள துரந்தர் 2 திரைப்படத்தில் பிரதமர் மோடி தொடர்பான காட்சி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Dhurandhar 2 PM Modi Scene : ஆதித்யா தர் இயக்கிய 'துரந்தர் - தி ரிவென்ஜ்' திரைப்படம் தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரன்வீர் சிங், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'துரந்தர் 2' இன்று வெளியான முதல் நாளிலேயே திரையரங்குகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து டிக்கெட் வாங்கி ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆக ஓடி வருகின்றன.

'துரந்தர் 2' படத்தில் இயக்குனர் ஆதித்யா தர் பல சர்ப்ரைஸான தருணங்களை ஒளித்து வைத்திருக்கிற. அவை நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி இந்தப் படத்தில் தோன்றுவதாக கூறப்படும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

'துரந்தர் 2'-ல் பிரதமர் மோடி காட்சி

'துரந்தர் 2' திரையரங்குகளில் வெளியான உடனேயே பல ஸ்பாய்லர்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியிருக்கின்றன. ரசிகர்கள் பல காட்சிகளை ஆன்லைனில் பகிர்ந்து வருகின்றனர். அதில் மிகவும் பேசப்படும் காட்சி, பிரதமர் நரேந்திர மோடி தொடர்பானது. பண மதிப்பிழப்பு தொடர்பான ஒரு வீடியோ கிளிப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. 2016-ல் திடீரென அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு முடிவும், 2014 பொதுத்தேர்தலில் பிரதமர் மோடியின் வெற்றியும் படத்தில் குறிப்பிடப்படுகின்றன.

 

 

படத்தில் ஒரு நடிகர் பிரதமர் மோடியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அஜய் சன்யால் நடிக்கும் கதாபாத்திரத்துடன் அவர் ஒரு இரகசிய மிஷன் பற்றி கலந்துரையாடும் காட்சி படத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும், தாவூத் இப்ராஹிம் கதாபாத்திரம் பிரதமர் மோடியைப் பற்றி பேசும் ஒரு காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. பிரதமர் மோடி தனக்கு எவ்வளவு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறார் என்பதை அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது. 'துரந்தர் 2' படத்தில் ரசிகர்களுக்காக இன்னும் பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

திருமணத்திற்கு நோ.. ஆனால் அந்த விஷயத்திற்கு ஓகே சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி
ராதாவாக மாறிய உதய சந்திரா - எப்படி, எதற்காக? யாருக்கும் தெரியாத உண்மை கதை இதோ!