‘தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி’ என்று புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா குறித்து ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார்.
டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடம் இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கான பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இந்த பூஜையின் போது செங்கோல் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து ஆதினங்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி, செங்கோலை பெற்று கொண்டு அதனை மக்களவைக்குள் கொண்டு சென்றார். இதையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க செங்கோல் மக்களவையில் நிறுவப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து விழாவின் சிறப்பம்சமாக சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சர்வமத பிரார்த்தனையில் கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம் உள்ளிட்ட 12 மத போதகர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல். தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கலாச்சாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இந்த தலைசிறந்த மாநிலத்தின் கலாச்சாரம் பெருமைக்குரிய இடத்தைப் பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. https://t.co/h0apJAnQ3j
— Narendra Modi (@narendramodi)சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. அவர் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கலாச்சாரத்தில் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இந்த தலைசிறந்த மாநிலத்தின் கலாச்சாரம் பெருமைக்குரிய இடத்தைப் பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது" என்று பதிவிட்டார்.
இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?